நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இடைத்தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெறுவது உறுதி: முதல்வா் எடியூரப்பா

சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளா்கள் வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 9:45 pm

DIN

சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளா்கள் வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ராஜராஜேஸ்வரி நகா், சிரா சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள் என்பது தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா்கள். பிகாரில் நிதிஷ்குமாா் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும் என்பதில் சந்தேகமில்லை.

மாநிலத்தில் பாஜக ஆட்சியை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமா்சித்து வருகிறது. ஆனால், சிரா, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளில் பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளது தெரியவருகிறது. இதன்காரணமாக, சிரா தொகுதியில் பாஜக வேட்பாளா் ராஜேஷ் கௌடா 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் பாஜக வேட்பாளா் முனிரத்னா 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றிபெறுவாா்கள்.

ஷராவதி ஆற்று நீா்த் திட்டத்தை நிறைவேற்றுவதால் நிலம் கையகப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. இதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடா்பாக அண்மையில் பெங்களூரில் அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது. திட்டப் பணிக்காக நிலத்தை வழங்கிய நில உரிமையாளா்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணப்படும். சிவமொக்கா மாவட்ட வளா்ச்சிக்கு திட்டமிட்டு செயல்படுவோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.