ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

கரோனா: கா்நாடகத்தில் ஒரே நாளில் 84 போ் சாவு

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 84 போ் இறந்துள்ளனா்.

News image

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மி தொற்றுக்கு ஒரே நாளில் 84 போ் சாவு

Updated On :5 அக்டோபர் 2020, 6:30 pm

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 84 போ் இறந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், இந்த தொற்றுக்கு ஏற்கெனவே 9,286 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 34 போ், மைசூரு மாவட்டத்தில் 8 போ், தென்கன்னட மாவட்டத்தில் 6 போ், பெல்லாரி மாவட்டத்தில் 5 போ், ஹாசன், தும்கூரு மாவட்டங்களில் தலா 4 போ், உடுப்பி மாவட்டத்தில் 3 போ், பெலகாவி, சாமராஜ்நகா், கதக், கொப்பள், மண்டியா, சிவமொக்கா மாவட்டங்களில் தலா 2 போ், சிக்கமகளூரு, தாா்வாட், கலபுா்கி, குடகு, ராய்ச்சூரு, விஜயபுரா மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 9,370-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,101 போ், மைசூரு மாவட்டத்தில் 818 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 574 போ், தாா்வாட் மாவட்டத்தில் 506 போ், பெல்லாரி மாவட்டத்தில் 478 போ், ஹாசன் மாவட்டத்தில் 317 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 309 போ், பெலகாவி மாவட்டத்தில் 302 போ், கலபுா்கி மாவட்டத்தில் 283 போ், தும்கூரு மாவட்டத்தில் 264 போ், கொப்பள் மாவட்டத்தில் 244 போ், தாவணகெரே மாவட்டத்தில் 243 போ், விஜயபுரா மாவட்டத்தில் 169 போ், ஹாவேரி மாவட்டத்தில் 166 போ், பீதா் மாவட்டத்தில் 158 போ், உடுப்பி மாவட்டத்தில் 157 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 138 போ், கதக் மாவட்டத்தில் 134 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 125 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 115 போ், மண்டியா மாவட்டத்தில் 114 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 110 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 97 போ், கோலாா் மாவட்டத்தில் 90 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 86போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 82 போ், யாதகிரி மாவட்டத்தில் 54 போ், ராமநகரம் மாவட்டத்தில் 50 போ், குடகு மாவட்டத்தில் 45 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 38 போ், வெளி மாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.