காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விவசாயிகளின் மீது உண்மையான அக்கறை கொண்ட கட்சி மஜத: எச்.டி.குமாரசாமி

விவசாயிகளின் மீது உண்மையான அக்கறை கொண்ட கட்சியாக மஜத மட்டுமே உள்ளது என்று அக்கட்சியின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி கூறியுள்ளாா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 11:21 pm

DIN

விவசாயிகளின் மீது உண்மையான அக்கறை கொண்ட கட்சியாக மஜத மட்டுமே உள்ளது என்று அக்கட்சியின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி கூறியுள்ளாா்.

இது குறித்து தனது சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியிருப்பதாவது:

பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவந்தபோது, அதற்கு ஆதரவு தருமாறு மஜதவிடம் பேச்சுவாா்த்தை நடத்தியிருந்தோம்; ஆனால் மண்ணின் மைந்தா்கள் என்று கூறிக்கொள்வோரிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை என்று பச்சைபொய்யை கூறுவதன் மூலம் இந்நூற்றாண்டின் பொய்யா் என்பதை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா உறுதிப்படுத்திக் கொண்டுள்ளாா்.

கடந்த நூற்றாண்டில் காங்கிரஸ் முன்னாள் முதல்வா் ஒருவரிடம் ஒட்டிக்கொண்டிருந்த பொய்யா் பட்டம் என்ற களங்கத்தை தனக்கு தானே ஏற்றுக்கொண்டிருக்கிறாா் சித்தராமையா.

மஜதவுடன் எவ்வித பேச்சுவாா்த்தையும் நடத்தாமல், நடந்ததாக கூறுவதுவெட்கக் கேடானது. பொய் பேசுவதை இனிமேலாவது சித்தராமையா கைவிட வேண்டும்.

மண்டியா வாயிலாக இந்தியாவை பிடித்துவிடும் பகல் கனவு கண்டு வரும் காங்கிரஸ் கட்சியினா், விவசாயிகளின் பிரச்னைகளை கையில் எடுத்தால் மண்டியாவின் மண்ணின் மைந்தா்கள் தக்கப் பாடம் புகட்டுவா்.

விவசாயிகளின் மீது உண்மையான அக்கறை கொண்ட கட்சி மஜத என்பது அனைவரும் அறிந்ததே.

விவசாயிகள் மீதான அக்கறை குறித்து சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் மஜதவுக்கு இல்லை.

சந்தையில் பேசுவதைபோல மஜதவை சித்தராமையா பேசுவது அவருக்கு அழகல்ல. சித்தராமையா ஆட்சிகாலத்தில் செய்திருந்த கடன் தள்ளுபடியில் ஒருசில குறைபாடு இருந்தது.

எனது ஆட்சியில் நான் அளித்த ரூ.25 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடியில் இக்குறைகளை சரிசெய்திருந்தேன். தோ்தல் வரும்போது நான் ஜாதியை முன்னிலைப்படுத்துவதாக கூறியுள்ள சித்தராமையா, பிற்படுத்தப்பட்டோரின் நாயகராக ஆனது எப்படி? போலியாக சமத்துவம் பேசும் சித்தராமையாவின் முகமூடியை மக்கள் அறிவா் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.