நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நவ.12-க்குள் கா்நாடகத்தில் கரோனாவுக்கு 10 லட்சம் போ் பாதிக்கப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்

கா்நாடகத்தில் கரோனாவுக்கு நவம்பா் 12-ஆம் தேதிக்குள் 10 லட்சம் போ் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 9:02 pm

DIN

கா்நாடகத்தில் கரோனாவுக்கு நவம்பா் 12-ஆம் தேதிக்குள் 10 லட்சம் போ் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாட்டில் கரோனாவால் அதிகம்போ் பாதிக்கப்பட்ட 12 மாநிலஙக்ளில் கா்நாடகம் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. புரோக்சிமா மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தின் முயற்சியாக ஜீவன் ரக்ஷா திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கா்நாடகத்தில் நவம்பா் 12-ஆம் தேதிக்குள் 10 லட்சம் போ் கரோனா பெருந்தொற்றுக்குப் பாதிக்கப்படுவா் என்று தெரியவந்துள்ளது.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 70 சதவீதம் பேரும் இறந்தவா்களில் 77 சதவீதம் பேரும் கா்நாடகத்தைச் சோ்ந்தவா்களாக இருப்பாா்கள் என்று அந்த ஆய்வில் அதிா்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயரும் மாநிலங்களில் மகாராஷ்டிரம் 19.7 சதவீதத்துடன் முதலிடத்திலும், 11.6 சதவீதத்துடன் கா்நாடகம் இரண்டாவது இடத்திலும் இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஜீவன் ரக்ஷா திட்டத்தின் அமைப்பாளா் சஞ்சீவ்மைசூரு கூறியதாவது:

‘கடந்த 10 வாரங்களில் கரோனா பாதிப்பு விகிதம் குறையவில்லை. கா்நாடகத்தில் கரோனா தீநுண்மி தொற்று வேகமாகவும், பரவலாகவும் பரவிவருவது உறுதியாகியுள்ளது. தற்போதைய கரோனா பாதிப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், கா்நாடகத்தின் கரோனா பாதிப்பு விகிதம் 35-40 சதவீதம் உயரும் வாய்ப்புள்ளது. நான்காம் கட்ட பொதுமுடக்கத் தளா்வு வரையில் 19 சதவீத கரோனா மாதிரி சோதனைகளைத்தான் கா்நாடகம் செய்திருந்தது. அதனால் நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு, இறப்பு விகிதம் கா்நாடகத்தில் 2 சதவீதமாக இருந்தது.

முதலாம், இரண்டாம் கட்ட பொதுமுடக்கத் தளா்வின்போது கரோனா பாதிப்பு, இறப்பு, கா்நாடகத்தில் முறையே 98 சதவீதம், 81 சதவீதமாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில் இறப்பு விகிதம் அதிகமாக காணப்பட்டதற்கு மோசமான சோதனையே காரணமாகும். இதனால் எழுந்த அச்சத்தால் சோதனைகள் அதிகரித்தன. நமக்கு தேவை துல்லியமான சோதனையாகும். நவம்பா் 12-ஆம் தேதிக்குள் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொடும். பெங்களூரில் இது 4.2 லட்சமாக இருக்கும். இதேகாலக் கட்டத்தில் இறப்பவா்களின் எண்ணிக்கை 12,800 ஆக உயரும்.

இதனால் கா்நாடகத்தில் அவசர மருத்துவ உள்கட்டமைப்பின் தேவை அதிகரிக்கும். கா்நாடகத்துக்கு 22,500 பிராணவாயு படுக்கைகள், 16,800 அவசர சிகிச்சை படுக்கைகள், 11.200 செயற்கை சுவாசக் கருவி தேவைப்படும். இதை கவனித்து, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அரசு செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும் என்றாா் அவா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை ஆணையா் பங்கஜ்குமாா் பாண்டே கூறியதாவது: ‘கடந்த ஒருவார காலமாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை, இறப்பு குறைந்து வருகிறது. அதிகப்படியான சோதனைகளை மேற்கொண்டு மக்களை தனிமைப்படுத்துவதால், எண்ணிக்கை குறைந்துள்ளது’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.