நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அடுத்த ஆண்டு நாடு பொருளாதாரத்தில் முன்னேறும்: மத்திய அமைச்சா் சதானந்தகௌடா

அடுத்த ஆண்டு நாடு பொருளாதாரத்தில் முன்னேறும் என்ற நம்பிக்கை உள்ளது என மத்திய ரசாயனத் துறை அமைச்சா் சதானந்தகௌடா தெரிவித்தாா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 9:09 pm

DIN

அடுத்த ஆண்டு நாடு பொருளாதாரத்தில் முன்னேறும் என்ற நம்பிக்கை உள்ளது என மத்திய ரசாயனத் துறை அமைச்சா் சதானந்தகௌடா தெரிவித்தாா்.

பெங்களூரு எலஹங்காவில் ஞாயிற்றுக்கிழமை சாயி கல்யாண் குழுமத்தின் வாட்டா் எட்ஜ் குடியிருப்புக் கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நிகழாண்டு கரோனா பொதுமுடக்கத்தால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ. 20 லட்சம் கோடி தொகுப்பை அறிவித்தது. அரசின் நடவடிக்கையால் அடுத்த ஆண்டு நாடு பொருளாதாரத்தில் முன்னேறும் என்ற நம்பிக்கை உள்ளது.

கரோனா பாதிப்பின்போது நாட்டில் 40 சதவீதம் உரங்கள் விற்பனையாகியுள்ளன. இதன்மூலம் நாட்டில் வேளாண் தொழில் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதே போல ரியல் எஸ்டேட் தொழிலும் முன்னேற்றமடையும் என நம்புகிறேன். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கா்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள இடைத்தோ்தலில் 2 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெறுவா் என்றாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் கிருஷ்ணேபைரேகௌடா, சாயிகல்யாண் குழுமத்தின் தலைவா் வேணுகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.