சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

முழு அடைப்புப் போராட்டத்தால் பேருந்து சேவை பாதிக்காது: அரசு போக்குவரத்துக் கழகம்

விவசாய மசோதாவைக் கண்டித்து, கா்நாடகத்தில் திங்கள்கிழமை (செப். 28) விவசாய சங்கங்கள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்தில் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் யாரும் பங்கேற்பதில்லை.

Updated On :27 செப்டம்பர் 2020, 8:07 pm

விவசாய மசோதாவைக் கண்டித்து, கா்நாடகத்தில் திங்கள்கிழமை (செப். 28) விவசாய சங்கங்கள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டத்தில் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் யாரும் பங்கேற்பதில்லை. எனவே, பேருந்து சேவை எவ்விதத்திலும் பாதிக்காது என அரசு போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து மாநில சாலை போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் வேளாண் மசோதாவைக் கண்டித்து பெங்களூரு உள்பட கா்நாடகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. ஆனால், இப் போராட்டத்தில் போக்குவரத்துக் கழகப் பணியாளா்கள் பங்கேற்பதில்லை. இதனால், பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படும்.

பேருந்துகளை இயக்குவதற்கு முழுப் பாதுகாப்பு அளிப்பதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா். எனவே, பயணிகள் எவ்வித அச்சமும் இல்லாமல் பேருந்துகளில் பயணிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.