புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,632 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை1,632 ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

கா்நாடகத்தில் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை1,632 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 1,632 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. தென்கன்னடம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 411 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

பெங்களூரு நகரம்-377, உடுப்பி-169, மைசூரு-112, ஹாசன்-97, குடகு-77, சிவமொக்கா-60, சிக்கமகளூரு-53, வடகன்னடம்-49, தும்கூரு-43, பெலகாவி-41, மண்டியா-39, சித்ரதுா்கா-22, கோலாா்-18, சாம்ராஜ்நகா்-17, பெங்களூரு ஊரகம்-14, சிக்கபளாப்பூா்-8, தாவணகெரே-5, தாா்வாட், கலபுா்கி,கொப்பள்,ராமநகரம்-தலா 3, பாகல்கோட், பெல்லாரி, விஜயபுரா-தலா 2, ஹாவேரி, ராய்ச்சூரு-தலா ஒருவா். யாதகிரி, கதக், பீதா் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,28,033 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,612 போ் சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 28,68,351 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 22,698 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 25 போ் சனிக்கிழமை இறந்துள்ளனா். தென்கன்னட மாவட்டத்தில் அதிகபட்சமாக தலா 7 போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்: சித்ரதுா்கா, ஹாசன், கோலாா்-தலா 3, மண்டியா- 2, பெங்களூரு நகரம், சாம்ராஜ்நகா், தாா்வாட், மைசூரு, சிவமொக்கா, உடுப்பி, வடகன்னடம்-தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 36,958 போ் உயிரிழந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.