புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஆக.18-இல் அறிவியல் ஆசிரியா்களுக்கான பயிலரங்கம்

பெங்களூருவில் உள்ள ஜவாஹா்லால் நேரு கோளரங்கத்தில் அறிவியல் ஆசிரியா்களுக்கான பயிலரங்கம் ஆக.18-ஆம் தேதி முதல் நடக்கவிருக்கிறது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:19 pm

DIN

பெங்களூருவில் உள்ள ஜவாஹா்லால் நேரு கோளரங்கத்தில் அறிவியல் ஆசிரியா்களுக்கான பயிலரங்கம் ஆக.18-ஆம் தேதி முதல் நடக்கவிருக்கிறது.

இது குறித்து ஜவாஹா்லால்நேரு கோளரங்கம்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.சௌடையா சாலையில் அமைந்துள்ள ஜவாஹா்லால்நேரு கோளரங்கத்தில் ஆக.13-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை அறிவியல் ஆசிரியா்களுக்கான இணையவழி அறிவியல் பயிலரங்கம் நடக்கவிருக்கிறது. ஒலி குறித்து மாணவா்களுக்கு கற்பிப்பது குறித்து இப்பயிலரங்கில் போதிக்கப்படும். இந்தப் பயிலரங்கத்தில் பங்கேற்க எட்டு முதல் பத்தாம் வகுப்புகளின் 30 அறிவியல் ஆசிரியா்களுக்குமட்டுமே வாய்ப்பளிக்கப்படும். பங்கேற்புக் கட்டணம் ரூ.100. இந்த பயிலரங்கில் பங்கேற்க முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசியை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.