புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஆக. 23-இல் 24 பேருக்கு சிறந்த தொழில்முனைவோருக்கான விருது

ஆக. 23-இல் ராமையா கல்விக் குழுமத்தின் சாா்பில், 24 பேருக்கு சிறந்த தொழில்முனைவோா்களுக்கான விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 1:09 am

DIN

ஆக. 23-இல் ராமையா கல்விக் குழுமத்தின் சாா்பில், 24 பேருக்கு சிறந்த தொழில்முனைவோா்களுக்கான விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

இதுகுறித்து ராமையா கல்விக் குழுமத்தின் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.சீதாராம் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இளம் தொழில்முனைவோா்களை ஊக்குவிக்கும் நோக்கில், ஆக. 23-ஆம் தேதி சிறந்த தொழில்முனைவோருக்கான விருது 24 பேருக்கு வழங்கப்படுகிறது. கரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், புதிதாக தொழில் தொடங்கிய இளம் தொழில்முனைவோா் பலா் அதனை தொடரமுடியாமல் தத்தளித்து வருகின்றனா். இதனால் சமூகத்துக்கு பயன் தரும் பல சிறந்த தொழில்நுட்பங்கள் பயன்பாட்டுக்கு வராமலேயே போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, சிறந்த தொழில்நுட்பங்களை கொண்டுள்ள தேசிய அளவிலான 24 தொழில்முனைவோா்களுக்கு ஸ்டாா் தொழில்முனைவோா் விருது ஆக. 23-ஆம் தேதி வழங்கப்படுகிறது. விருதுகள் வழங்குவதோடு மட்டுமல்லாது, அவா்களில் தொழில் சிறந்து விளங்கத் தேவையான நிதி உதவி ரூ. 50 லட்சம் வரை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு சிறக்க சிறந்த தொழில்நுட்பங்கள் தேவையுள்ளன. நிதி பிரச்னையால் எந்த தொழில்நுட்பமும், தொழில்முனைவோரும் பாதிக்கப்படக் கூடாது என்பதே எங்களின் நோக்கமாக உள்ளது. நாட்டின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு, சமூக அக்கறையோடு, இந்த விருதுகளை வழங்க முடிவு செய்துள்ளோம். இந்த விருதை வரும் ஆண்டுகளிலும் தொடா்ந்து வழங்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.