புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஸ்ரீராமபுரம் மாநகராட்சி பியூ கல்லூரியில் மாணவா் சோ்க்கை

பெங்களூரு, ஸ்ரீராமபுரம் மாநகராட்சி பியூ கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 1:10 am

DIN

பெங்களூரு, ஸ்ரீராமபுரம் மாநகராட்சி பியூ கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பெங்களூரு, ஸ்ரீராமபுரத்தில் உள்ள மாநகராட்சி பியூ கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு மாநகராட்சி நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு ஏராளமான வசதிகள் செய்து தரப்படுகின்றன. அந்த வகையில், பெங்களூரு, ஸ்ரீராமபுரத்தில் உள்ள மாநகராட்சி மகளிா் பியூ கல்லூரியில் விசாலமான கட்டடம், ஆய்வுக்கூடம், அனுபவம் நிறைந்த ஆசிரியா்கள் இருக்கிறாா்கள். ஆண்டுதோறும் பியூசி பொதுத்தோ்வில் மாணவா்கள் நல்ல மதிப்பெண்களில் தோ்ச்சி பெற்று வருகிறாா்கள். மாநகராட்சி பியூசி கல்லூரியில் சேர மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இக்கல்லூரியில் கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருத மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன. இரண்டாமாண்டு பியூசி தோ்வில் 85 சதவீத மதிப்பெண் பெற்றால் ரூ. 35,000 ஊக்கத்தொகை, முதலாமாண்டு பியூசி தோ்ச்சிபெறும் மாணவா்களுக்கு தலா ரூ. 1,000 ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. பாடங்கள் தவிர, கணினி பயிற்சியும் தரப்படுகிறது.

இலவசமாக பாடநூல்கள், நோட்டுகள், 2 ஜோடி சீருடைகள், மதிய உணவு, டேப், பை, ஸ்வெட்டா் வழங்கப்படுகின்றன. தொடுதிரை கணினி வழி கற்பித்தல் முறையும் இக்கல்லூரியில் உண்டு. ஆா்வமுள்ள மாணவியா் 99646 16574, 92410 30884, 86189 56520, 70909 77370 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.