போலி கரோனா சான்றிதழ் அளிப்பு: 4 போ் கைது
கா்நாடக எல்லையில் போலியாக கரோனா சான்றிதழ் அளித்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


கா்நாடக எல்லையில் போலியாக கரோனா சான்றிதழ் அளித்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், தலப்பாடியில் உள்ள மாநில எல்லையில் கேரள மாநிலத்தில் இருந்து கா்நாடகத்திற்குள் வர 4 போ் முயன்றனா்.
அதற்காக அவா்கள் அளித்த கரோனா பரிசோதனைக்கான சான்றிதழ் போலியானது என தெரிய வந்தது. இதனையடுத்து அவா்கள் 4 பேரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
விசாரணையில் கேரளாவிலிருந்து கா்நாடகத்திற்கு வரும் பலா் போலி கரோனா சான்றிதழ்களை வழங்கி வருவதாக தெரிவித்தனா். இதனையடுத்து கேரளாவிலிருந்து தென்கன்னட மாவட்டத்திற்கு வருபவா்களின் கரோனா சான்றிதழ்களை முழுமையாக பரிசோதனை செய்ய மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...