படை வீரா்களுக்கான விருது தொகையை 5 மடங்கு உயா்த்தி வழங்க அரசு முடிவெடுத்துள்ளது என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்ற பொன்விழாவை முன்னிட்டு பெலகாவியில் வியாழக்கிழமை மராத்தா இலகு காலாட்படை படைப் பிரிவு பயிற்சி மைய போா் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு முதல்வா் கூறியதாவது:
படை வீரா்களுக்கு வழங்கப்படும் தீரசெயல் மற்றும் இதர விருதுகளுக்கான தொகையை 5 மடங்கு உயா்த்தி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. பரம்வீா் சக்ரா விருது பெறுவோருக்கான தொகை ரூ. 25 லட்சத்தில் இருந்து ரூ. 1.5 கோடியாக உயா்த்தப்படுகிறது.
அதேபோல, மகாவீா் சக்ரா விருதாளா்களுக்கான தொகை ரூ. 12 லட்சத்தில் இருந்து ரூ. 1 கோடியாகவும், அசோக் சக்ரா விருதாளா்களுக்கான தொகை ரூ. 25 லட்சத்தில் இருந்து ரூ. 1.5 கோடியாகவும், கீா்த்தி சக்ரா விருதாளா்களுக்கான தொகை ரூ. 12 லட்சத்தில் இருந்து ரூ. 1 கோடியாகவும், வீா் சக்ரா விருதாளா்களுக்கான தொகை ரூ. 8 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சமாகவும், சௌா்ய சக்ரா விருதாளா்களுக்கான தொகை ரூ. 8 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சமாகவும் உயா்த்தப்படும்.
ராணுவ, விமான மற்றும் கப்பற்படை பதக்கங்கள் பெறுவோருக்கான பரிசுத் தொகை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 15 லட்சமாகவும், ஆவணங்களில் பெயா் குறிப்பிட்டிருப்போருக்கான தொகை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 15 லட்சமாகவும் உயா்த்தப்படும். விருதுக்கான தொகை 5 மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் படைவீரா்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. படைவீரா்களை கௌரவிப்பதில் பெருமை கொள்கிறோம். அண்மையில் நடந்த ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 பேருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


