காரைக்கால்: காரைக்காலில் பழைமையான கட்டட சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பெண் பலியானார்.
காரைக்கால் பாரதியார் சாலையில் நகராட்சி திருமண மண்டபம் அருகே ஒரு கட்டடத்தில் மதுக்கடை நடத்தப்பட்டு வந்தது.
மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றும் விதமாக, கட்டடத்தின் பொருள்கள் கடந்த 2 நாள்களாக அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், திங்கள்கிழமை முற்பகல் கட்டடத்தின் முதல் தளத்தின் முகப்பு சுவர் திடீரென சாய்ந்து சாலையில் விழுந்தது.
அப்போது, அந்தக் கட்டடம் அருகே சாலையோரமாக நடந்து சென்றுக்கொண்டிருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஜூனைதா பேகம் (65) என்பவர் மீது சுவர் விழுந்ததில் அவர் நிகழ்விடத்திலேயே பலியானார்.
தகவலின்பேரில் காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸார், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போக்குவரத்து மிகுந்த பிரதான சாலை என்பதால், தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சாலையில் கிடந்த இடிபாடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்த சாலையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
இதுகுறித்து, காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Summary
In Karaikal, the wall of an old building collapsed, killing a woman who was walking along the roadside.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

அரசு மருத்துவமனைச் சுவர் இடிந்து விபத்து! 7 பேர் பலி! | Bengaluru
சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு: இருவா் மீது வழக்கு

கட்டட சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை


