மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

கெளரி தொடரில் ரோஜா தொடர் நடிகை!

கெளரி தொடரில் ரோஜா தொடர் நடிகை நடிக்கவுள்ளது குறித்து...

priyanka nalgari

பிரியங்கா நல்காரி - படம்: இன்ஸ்டாகிராம்

Published On :

கெளரி தொடரில் ரோஜா தொடர் நாயகி பிரியங்கா நல்காரி புதிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்றான கெளரி தொடரில், கெளரியாக சம்யுக்தாவும் நரேஷ் ஈஸ்வர் அசோக் பாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.

பத்மாவதி திரைக்கதை எழுத, பரமேஷ்வர் இத்தொடரை இயக்குகிறார். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடரை, இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பிரபலம் நடிகை சுஜிதா, கருமாரி அம்மனாக சிறப்புத் தோற்றத்தில் இந்தத் தொடரில் நடிக்கிறார்.

இந்த நிலையில், கெளரி தொடரில் ரோஜா தொடர் நாயகி பிரியங்கா நல்காரி நடிக்கவுள்ளார். இவர் மங்கா என்ற புதிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கும் கெளரி தொடர், பிரியங்கா நல்காரியின் வருகையால், இந்தத் தொடரின் சுவாரசியம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த பிரியங்கா நல்காரி?

தமிழில் தீயா வேலை செய்யனும் குமாரு மற்றும் காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி.

இவர், மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ரோஜா தொடரில் நாயகியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர். இதனைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீதா ராமன், நளதயமந்தி ஆகிய தொடர்களில் நடித்திருந்தார்,

பின்னர், நடிகர் ஜிஷ்ணு மேனனுடன் ரோஜா - 2 தொடரில் நடிகை பிரியங்கா நல்காரி நடித்திருந்தார். ரோஜா தொடர் இரண்டாம் பாகத்துக்குப் பிறகு தொடர்களில் நடிக்காமல் இருந்த பிரியங்கா, மீண்டும் சின்ன திரையில் தனது பயணத்தை கெளரி தொடர் மூலம் தொடங்கவுள்ளார்.

Summary

Priyanka Nalkari, the lead actress of the series Roja, will be playing a new role in the series Gowri.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.