புதுவசந்தம் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை சோனியா சுரேஷ் புதிய தொடரில் நாயகியாக நடிக்கவுள்ளார்.
நேரடியாகத் தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகவுள்ள இந்தத் தொடர், ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த பெண்ணை அடிப்படையாக வைத்து எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1.30 மணிக்கு புது வசந்தம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரின் நாயகியாக சோனியா சுரேஷ் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஷியாம் ஜி நடிக்கிறார்.
புதுவசந்தம் தொடரில்... - இன்ஸ்டாகிராம்
2023 முதல் ஒளிபரப்பாகிவரும் இத்தொடரில் நடித்து வருவதன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள சோனியா சுரேஷ், சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர்.
வசீகரமான தோற்றத்தாலும் குடும்பப்பாங்கான நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இவர், தெலுங்கில் உப்பென்னா என்ற தொடரிலும் நடித்துள்ளார்.

புதிய தொடரில் சோனியா சுரேஷ் - இன்ஸ்டாகிராம்
தற்போது தெலுங்கில் புதிய தொடரில் நாயகியாக நடிக்கவுள்ளார். ஏ தேவி வரவோ நூவு எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடர், ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த பெண்ணை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு உருவாகி வருகிறது. இத்தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஏ தேவி வரவோ நூவு தொடரின் முன்னோட்டத்திலிருந்து... - இன்ஸ்டாகிராம்
Summary
Tamil serial actress soniya suresh acts in new serial
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய கார் வாங்கியதை வித்தியாசமாகக் கொண்டாடிய சீரியல் நடிகை!

ஆனந்த ராகம் சீரியல் நாயகியின் புதிய தொடர்! சொக்கத் தங்கம்!

1000 நாள்களைக் கடந்த சிறகடிக்க ஆசை தொடர்!

சின்ன மருமகள் தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan




