ஹரியாணாவில் பள்ளி கூரையின் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 10 மாணவர்கள் காயமடைந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணா மாநிலம், ஃபரிதாபாத்தில் தனியார் பள்ளிக்கு அருகில் கட்டப்பட்டு வந்த கட்டடத்தின் சுவர் இடிந்து பள்ளி கூரையின் மீது சனிக்கிழமை விழுந்தது. இந்த சம்பவத்தில் பத்து பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கிய பள்ளி ஊழியர்கள், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த மாணவர்களை வெளியே மீட்டனர். நான்கு மாணவர்கள் பலத்த காயங்களுடனும், மற்ற ஆறு பேர் லேசான காயங்களுடனும் தப்பினர் என்று போலீஸார் கூறினர்.
காயமடைந்த அனைத்து மாணவர்களும் சிகிச்சைக்காக பி.கே. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அவர்களது குடும்பத்தினர் பள்ளிக்கும் பின்னர் மருத்துவமனைக்கும் விரைந்தனர்.
போலீஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். விபத்து நடந்த உடனேயே மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அருகிலுள்ள கட்டடம் பாதுகாப்பு விதிமுறைகளின்படி கட்டப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Summary
Ten school students were injured after a wall of an under-construction building adjacent to a private school collapsed onto a school roof on Saturday, said police.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்நாடகம்: கனமழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

ஜம்முவில் கட்டுமானப் பாலம் இடிந்து விழுந்ததில் சிக்கிய 3 தொழிலாளர்கள் பலி!

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

அரசு மருத்துவமனைச் சுவர் இடிந்து விபத்து! 7 பேர் பலி! | Bengaluru
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher




