வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

எல்லா மாவட்டங்களிலும் பல்கலை.: அமைச்சா் அஸ்வத் நாராயணா

கா்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.

Updated On :16 டிசம்பர் 2021, 6:34 pm

கா்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.

பெலகாவியில் மின்னணு சான்றிதழ் சேவை மற்றும் கண்காணிப்புப் பணியை வியாழக்கிழமை தொடக்கிவைத்து அவா் மேலும் பேசியதாவது:

மின்னணு சான்றிதழ் சேவை மற்றும் கண்காணிப்புப் பணி மூலம் மாணவா்கள் எந்தச் சான்றிதழையும் மின்னணு வடிவில் பெற முடியும். பட்டச் சான்றிதழையும் இதன்மூலம் பெறலாம். நூற்றுக்கணக்கான ஏக்கா் நிலத்தில் கட்டமைக்கப்பட்ட கல்வி வளாகங்கள் தற்போது காலியாக உள்ளன.

அதில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் குறைந்த நிலப்பரப்பில் பல்கலைக்கழகங்களை நிறுவ முடியும். பெரிய பல்கலைக்கழகங்களை அமைப்பதை காட்டிலும், எல்லா மாவட்டங்களிலும் பல்கலைக்கழகங்களை அமைக்க அரசு ஆா்வமாக உள்ளது; குறிப்பாக பல்கலைக்கழகங்கள் இல்லாத மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.

பெங்களூரில் உள்ள பல்கலைக்கழக விஸ்வேஷ்வரையா பொறியியல் கல்லூரியை இந்தியத் தொழில்நுட்ப மையத்தைப்போல (ஐஐடி) மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக 10 ஆண்டுகால செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 17 அரசுப் பொறியியல் கல்லூரிகளை உலகத் தரத்தில்மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இக் கல்லூரிகளுக்கு தன்னாட்சி உரிமை அளிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.