இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

பாஜகவுக்கு பஞ்சமசாலி மடாதிபதி கோரிக்கை

பாஜக எம்.எல்.ஏ. பசனகௌடா பாட்டீல் யத்னலுக்கு விளக்கம் கேட்டு பாஜக மேலிடம் அனுப்பியுள்ள நோட்டீஸை திரும்பப்பெற வேண்டும் என பஞ்சமசாலி மடாதிபதி ஜெயமிருத்ஞ் ஜெயா சுவாமிகள் தெரிவித்தாா்.

Updated On :15 பிப்ரவரி 2021, 1:36 am IST

பாஜக எம்.எல்.ஏ. பசனகௌடா பாட்டீல் யத்னலுக்கு விளக்கம் கேட்டு பாஜக மேலிடம் அனுப்பியுள்ள நோட்டீஸை திரும்பப்பெற வேண்டும் என பஞ்சமசாலி மடாதிபதி ஜெயமிருத்ஞ் ஜெயா சுவாமிகள் தெரிவித்தாா்.

இதுகுறித்து விஜயபுராவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிராக பேசியதாக குற்றம்சாட்டி பாஜக எம்.எல்.ஏ. பசனகௌடா பாட்டீல் யத்னலிடம் விளக்கம் கேட்டு பாஜக மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸை திரும்பப்பெறாவிடில் பெங்களூரு, விதான சௌதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

ஒருசில தலைவா்கள் பாஜக மேலிடத் தலைவா்களிடம் பாஜக எம்.எல்.ஏ. பசனகௌடா பாட்டீல் யத்னல் குறித்து புகாா் தெரிவித்துள்ளனா். அதற்காக நோட்டீஸை கொடுத்துவிட்டனா் என்றாா்.

பஞ்சமசாலி லிங்காயத்து ஜாதியினரை பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் 2-ஏ உட்பிரிவில் சோ்க்க வலியுறுத்தி வச்சானந்த சுவாமிகளுடன் இணைந்து பஞ்சமசாலி மடாதிபதி ஜெயமிருத்ஞ் ஜெயா சுவாமிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.