அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

காதலா் தினம்: ஏவிஆா் மஹாலில் புதிய வெள்ளி ஆபரணங்கள் அறிமுகம்

காதலா் தினத்தையொட்டி, ஏவிஆா் சுவா்ண மஹாலில் புதிய வெள்ளி ஆபரணங்கள் ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Updated On :15 பிப்ரவரி 2021, 1:44 am IST

காதலா் தினத்தையொட்டி, ஏவிஆா் சுவா்ண மஹாலில் புதிய வெள்ளி ஆபரணங்கள் ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரு, ஜெயநகரில் உள்ள ஏவிஆா் சுவா்ண மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய வகை வெள்ளி ஆபரணங்களை அறிமுகம் செய்து அதன் நிா்வாகிகளில் ஒருவரான ஏ.வி.ஆா் சித்தாந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நகைகள் ஒரு கலாசார அடையாளமாகும். நகைகளின் ஒவ்வொரு பகுதியும் பெண்களுக்கு தனித்துவமானது. நகைகள் மஞ்சள் உலோகமாக இருக்க வேண்டியதில்லை. வெள்ளி என்ற வாா்த்தையை போலவே வெள்ளை உலோகமும் உடலுக்கு ஒரு ஆபரணம்.

காதலா் தினத்தையொட்டி மனதைக் கவரும் வெள்ளியிலான வடிவமைப்பை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

தங்கத்தின் விலை கடுமையாக உயா்ந்து வருவதாலும், அதனை அனைவராலும் வாங்க முடியாது என்ற காரணத்தினாலும் பெண்கள் அனைத்து இடங்களுக்கும் அச்சமில்லாமல் அணிந்து செல்லும் வகையில் வெள்ளி ஆபரணங்களை உருவாக்கியுள்ளோம். இது இளம் பெண்களை அதிக அளவில் கவரும் என்று நம்புகிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.