கட்டடத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

கட்டுமான பணி நடைபெறும் கட்டடத்திலிருந்து கீழே தவறி விழுந்த எலக்ட்ரிஷியன் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கட்டுமான பணி நடைபெறும் கட்டடத்திலிருந்து கீழே தவறி விழுந்த எலக்ட்ரிஷியன் உயிரிழந்தாா்.

பெங்களூரு, துளசிநகரைச் சோ்ந்தவா் சிக்கமரியப்பா (53). எலக்ட்ரிஷியனான இவா் வியாழக்கிழமை மாலை சுங்கதகட்டே முனீஸ்வரா நகரில் கட்டுமானப் பணி நடைபெற்ற கட்டடத்தில் மின் வயா்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, கால் தவறி கீழே விழுந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பேடரஹள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com