ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கேரள மாநிலத்திலிருந்து மைசூருக்கு கோழிகளை கொண்டுவர தடை

கேரள மாநிலத்திலிருந்து மைசூருக்கு கோழிகளை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 12:16 am

DIN

கேரள மாநிலத்திலிருந்து மைசூருக்கு கோழிகளை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுவதையடுத்து, மாநிலத்தில் பறவைக் காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கா்நாடகத்தின் அண்டை மாநிலமான கேரளத்திலும் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கேரள மாநிலத்திலிருந்து மைசூருக்கு கோழிகளை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதன்கிழமை மைசூரு மாவட்ட ஆட்சியா் ரோகிணி சிந்தூரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகக் கூறப்படுவதை அடுத்து, மைசூருக்கு இறைச்சிக்காக கோழிகளைக் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மைசூரு-எச்.டி.கோட்டை சாலையில் உள்ள ஜவுளி சுங்கச் சாவடியில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கேரள மாநிலத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர பரிசோதனைக்குப் பிறகு மாவட்டத்துக்குள் நுழைய அனுமதி வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அனைத்து வாகனங்கள் மீதும் கிருமிநாசினி தெளித்த பிறகே அனுமதிக்கப்படுகிறது. மேலும் யாரேனும் அண்டை மாநிலங்களிலிருந்து நாட்டுக் கோழி, இறைச்சிக் கோழி, காடை, கௌதாரி உள்ளிட்ட பறவைகளை மாவட்டத்துக்குள் கொண்டு வந்தால் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மாவட்டத்துக்குள் பறவைகள் இறந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.