வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஐ.ஏ.எஸ். : பத்தில் இரண்டு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் நடந்து வந்தாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வெற்றி பெறுவதில்லை.

News image
ராஜேஸ்வரி சுவே
Updated On :15 மார்ச் 2026, 9:24 am

பிஸ்மி பரிணாமன்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் நடந்து வந்தாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வெற்றி பெறுவதில்லை. ஆனால், இந்த ஆண்டு ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் அகில இந்திய தர வரிசையில் முதல் 10 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் வந்ததில்லை. 2015-இல் தமிழ்நாட்டைச் சேர்ந்த சரண்யா அரி அகில இந்திய அளவில் 7-ஆவது ரேங்க் எடுத்து தேர்வு பெற்றார். 2015 -க்குப் பிறகு இந்த ஆண்டுதான், முதல் பத்து இடங்களுக்குள் இரண்டு தமிழ்நாட்டு மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

2025 ஆகஸ்ட்டில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளைத் தொடர்ந்து, 2026 பிப்ரவரியில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுகளின் இறுதி முடிவுகள் அண்மையில் வெளியானது. கடந்த ஆண்டு 57 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 56 பேர் மாநிலத்திலிருந்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

போட்டித் தேர்வில் அனுஜ் அக்னிஹோத்ரி என்ற மாணவர் அகில இந்திய அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் மாணவனாக வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே, அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தையும், அகில இந்திய அளவில் பெண்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா மொகைதீன் அகில இந்திய தர வரிசையில் ஏழாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

ராஜேஸ்வரி சுவே

என்னுடைய சொந்த ஊர் மதுரை மாவட்டத்தின் வாடிப்பட்டி. அப்பா முருகதாஸ் காப்பீடு முகவராகப் பணிபுரிவதுடன், இருசக்கர வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடையும் நிர்வகித்து வருகிறார். அம்மா நாகராணி மதுரை தனியார் கல்லூரி ஒன்றில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். 2018-இல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலை முடித்த கையுடன் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக என்னை தயார் செய்யும் முயற்சிகளைத் தொடங்கினேன். அதற்கான புத்தகங்களை வாங்கிப் படித்து போட்டித் தேர்வுகள் எழுதினேன். வெற்றி கிடைக்காதலால் பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். ஆனாலும் தேர்வாகவில்லை.

இப்படி மூன்று ஆண்டுகள் ஓடின. இடைக்கால நிவாரணமாக 2024-இல் தமிழ்நாடு தேர்வு ஆணையம் நடத்திய குரூப் 1 தேர்வில் முதல் மாணவியாக தேர்வு பெற்றேன். அதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத் துணை ஆட்சியராகப் பதவியில் சேர்ந்தேன்.

ஆனாலும் ஐ.ஏ.எஸ். கனவு என்னைவிடாமல் தூண்டிக் கொண்டே இருந்தது. தளர்ந்து போகாமல் படித்து தேர்வு எழுதினேன். தேர்ச்சிபெற்றுவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தாலும், அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பேன் என்று நினைக்கவில்லை. ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக சமூகவியல் பாடத்தை முதன்மைப் பாடமாகத் தேர்ந்தெடுத்திருந்தேன்.

என்னை நான் தயார் செய்வதில் தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டம் பெரிதும் உதவியுள்ளது. இந்தத் திட்டம் மூலம் கிடைத்த பயிற்சி, துணை ஆட்சியர் பதவி கிடைக்க உதவியது. துணை ஆட்சியராகப் பணிபுரிந்து கிடைத்த அனுபவம், ஐ.ஏ.எஸ். தேர்வில் இரண்டாம் ராங்க் கிடைக்க உதவியது. நான் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவள் என்பதால் நேர்முகத் தேர்வில் திருப்பரங்குன்றத் தீபம் ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்னை குறித்தும் என்னிடம் கேள்விகள் கேட்டார்கள்.

Story image

ராஜா முகைதீன்

நான் தென்காசி வடகரையைச் சேர்ந்தவன். அடிப்படையில் நான் ஓர் ஆங்கில மருத்துவர். படித்தது அனைத்தும் சென்னையில். கூடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்து மருத்துவர் ஆனேன். ஆனால், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகவேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. தேர்வு எழுத ஆரம்பித்தேன். மூன்றாவது முயற்சியில் எனது லட்சியத்தில் வெற்றி அடைந்தேன். இந்திய அளவில் ஏழாவது இடத்தைப் பிடிக்க முடிந்தது ஒரு சாதனைதான்.

இவர்களைத் தவிர அருண்குமார் ஏ (ரேங்க் 585), டாக்டர் நிஷாந்த் டி (ரேங்க் 821) ஆகியோர் தமிழில் ஐ.ஏ.எஸ். தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.