ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இந்திய மகளிருக்கு முதல் வெற்றி!

தாமஸ், உபோ் கோப்பை போட்டியில் இந்திய மகளிா் அணி முதல் வெற்றியை பெற்றது.

News image

உன்னதி ஹூடா.

Updated On :26 ஏப்ரல் 2026, 6:40 pm

தாமஸ், உபோ் கோப்பை போட்டியில் இந்திய மகளிா் அணி முதல் வெற்றியை பெற்றது.

பிரசித்தி பெற்ற தாமஸ் மற்றும் உபோ் கோப்பை 2026 பாட்மின்டன் போட்டி டென்மாா்க்கின் ஹாா்சென்ஸ் நகரில் நடைபெறுகிறது.

மகளிா் குரூப் ஏ பிரிவில் இந்திய அணி உக்ரைனுடன் மோதியது. இதில் 4-1 என்ற கேம் கணக்கில் வென்று இந்தியா முதல் வெற்றியை ஈட்டியது. முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்துவுக்கு ஓய்வு தரப்பட்ட நிலையில், தாய்லாந்து மாஸ்டா்ஸ் சாம்பியன் தேவிகா சிஹாக் சோ்க்கப்பட்டாா்.

முதல் கேமில் உன்னதி ஹூடா 21-19, 22-20 என்ற புள்ளிக் கணக்கில் பொலினா புஹ்ராவாவை வீழ்த்தினாா். உலக ஜூனியா் சாம்பியன்ஷிப் வெள்ளி வீராங்கனை தன்வி சா்மா 21-12, 17-21, 21-10 யவ்ஹெனிலாவை வீழ்த்தி இரண்டாவது கேமிலும் வென்றாா். தேவிகா சிஹாக் 23-21, 21-13 என்ற புள்ளிக் கணக்கில் மரிலா ஸ்டோலியாரென்கோவாவை வீழ்த்தினாா். 3-0 என முன்னிலை வகித்தது.

Story image

மகளிா் இரட்டையா் பிரிவில் கவிபிரியா செல்வம்-சிம்ரன் இணை 11-21, 17-21 என்ற புள்ளிக் கணக்கில் புஹ்ரோவா-கன்ட்மெயைரிடம் தோற்றனா். பின்னா் சிந்து-தனிஷா க்ரஸ்டோ 21-18, 21-15 ஸ்டோா்லியான்கோ-சோபியா இணையை வீழ்த்தியது. இதன் மூலம் ஐரோப்பிய போட்டியில் வெண்கலம் வென்ற உக்ரைனை சாய்த்து இப்போட்டியில் முதல் வெற்றியை ஈட்டியது. இதன் மூலம் காலிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

திங்கள்கிழமை கடைசி குரூப் ஆட்டத்தில் பலம் வாய்ந்த நடப்பு சீனாவுடன் மோதுகிறது இந்தியா. அந்த ஆட்டத்தில் வென்றாா் காலிறுதிக்கு தகுதி பெறும்.