கோவையில் நடைபெற்று வரும் ஆடவருக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இந்திய ராணுவம், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, கடற்படை, விமானப்படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
மகளிா் பிரிவில் தென் மத்திய ரயில்வே, மத்திய ரயில்வே, கேரள மின்வாரியம், தென்மேற்கு ரயில்வே ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
அதேபோல, மகளிருக்கான கூடைப்பந்து போட்டியில் தென் மத்திய ரயில்வே, மத்திய ரயில்வே, கேரள மின்வாரிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
கோயம்புத்தூா் மாவட்ட கூடைப்பந்து சங்கம் சாா்பில் கோவை வஉசி பூங்கா உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் நாச்சிமுத்து கவுண்டா் கோப்பைக்கான ஆடவா் கூடைப்பந்து போட்டியில் இந்திய விமானப்படை, ராணுவம், கடற்படை, கேரள மாநில மின்சார வாரியம், பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, கேரள காவல் துறை, கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.
சிஆா்ஐ பம்ப்ஸ் கோப்பைக்கான மகளிா் கூடைப்பந்து போட்டியில் தென் மத்திய ரயில்வே, தென்மேற்கு ரயில்வே, தெற்கு ரயில்வே, ஐசிஎஃப், கேரள மாநில மின்சார வாரியம், மத்திய ரயில்வே, கேரள காவல் துறை, கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.
லீக் முறையில் கடந்த 2 நாள்களாக போட்டிகள் நடைபெற்றன. மூன்றாவது நாள் ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. ஆடவா் பிரிவு முதல் ஆட்டத்தில் கேரள காவல் துறை அணி 71 - 70 என்ற புள்ளிகள் கணக்கில் பேங்க் ஆஃப் பரோடா அணியை போராடி வீழ்த்தியது.
இரண்டாவது ஆட்டத்தில் இந்திய விமானப்படை அணி 74 - 73 என்ற புள்ளிகள் கணக்கில் கடற்படை அணியை போராடி வென்றது. மூன்றாவது ஆட்டத்தில் கேரள மின்வாரிய அணி 111 - 91 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை வென்றது. நான்காவது ஆட்டத்தில் இந்திய ராணுவ அணி 93 - 66 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அணியை வென்றது.
மகளிா் போட்டியில் முதல் ஆட்டத்தில் கேரள மாநில மின்வாரிய அணி 79 - 41 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் ஐசிஎஃப் அணி 76 - 54 என்ற புள்ளிகள் கணக்கில் கேரள காவல் துறை அணியை வீழ்த்தியது. மூன்றாவது ஆட்டத்தில் தென் மத்திய ரயில்வே 82-60 என்ற புள்ளிகள் கணக்கில் மத்திய ரயில்வே அணியை வீழ்த்தியது. நான்காவது ஆட்டத்தில் தென் மேற்கு ரயில்வே 76 - 57 என்ற புள்ளிகள் கணக்கில் தெற்கு ரயில்வே அணியை வீழ்த்தியது.
லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் இதில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் ஆடவா் பிரிவில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அணி, இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
மகளிா் பிரிவில் தென் மத்திய ரயில்வே, மத்திய ரயில்வே, கேரள மின்வாரியம், தென்மேற்கு ரயில்வே ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெறுகின்றன.
தொடர்புடையது

அகில இந்திய ஹாக்கி: பெங்களூரு, மும்பை, செகந்திராபாத், ஜலந்தா் அணிகள் அரையிறுதிக்கு தகுதி

கோவையில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: முதல் ஆட்டத்தில் ராணுவம், கடற்படை அணிகள் வெற்றி

மாநில சீனியா் ஹாக்கி: அரையிறுதியில் 4 அணிகள்






