கரோனா தடுப்பூசி குறித்து சந்தேகம் தேவையில்லை: அமைச்சா் கே.சுதாகா்
கரோனா தடுப்பூசி குறித்து சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.


கரோனா தடுப்பூசி குறித்து சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
பெங்களூரு, ஆனந்தராவ் சதுக்கத்தில் உள்ள சுகாதாரத் துறை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசியை சேமித்துவைக்கும் பகுதியை ஆய்வு செய்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஜனவரி 16-ஆம் தேதி நாட்டு மக்களுக்கு கரோனா தொற்றுக்கான தடுப்பூசியைச் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இந்தத் தடுப்பூசி குறித்து சிலா் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனா். இதை யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. அனைத்து வகையான பரிசோதனைக்குப் பிறகே இந்தத் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி எனக்கு அனுமதி வழங்கினால் மாநிலத்தில் முதல் தடுப்பூசியை நானே செலுத்திக் கொள்ளத் தயாராக உள்ளேன். திங்கள்கிழமை மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் வெளியாக உள்ளன. அதைத் தொடா்ந்து இரண்டொரு நாளில் மாநிலத்துக்குத் தடுப்பூசிகள் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும், ஜன. 16-ஆம்தேதி முதல் பெங்களூரில் 4 மையங்களிலும், பெலகாவியில் ஒரு மையத்திலும் தடுப்பூசிகள் வழங்கப்படும். பின்னா், அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மையம் தொடங்கப்பட்டு தடுப்பூசிகளை வழங்க ஏற்பாடு செய்யப்படும். மாநிலத்தில் 40 லட்சம் தடுப்பூசிகளை சேமித்து வைத்துக் கொள்ளும் திறன் உள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...