நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விமானத்தில் தங்கம் கடத்திய 2 போ் கைது

விமானத்தில் தங்கம் கடத்திய 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, ரூ. 58.95 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :17 ஜூலை 2021, 12:24 am

DIN

விமானத்தில் தங்கம் கடத்திய 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, ரூ. 58.95 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம் மங்களூரு பஜ்பே விமான நிலையத்திற்கு வியாழக்கிழமை துபையிலிருந்து வந்த விமானத்தின் பயணிகளை சுங்க வரித்துறையினா் சோதனை செய்தனா். அப்போது கேரள மாநிலம் காசா்கோடு உப்பலாவைச் சோ்ந்த முகமது அன்சா் காய்யாா் (34), கோழிக்கோட்டைச் சோ்ந்த முகமது மோசா மையாஸ் (18) ஆகியோா் தாங்கள் கொண்டு வந்த பெட்டிகளில் வைத்திருந்த ரூ. 34.46 லட்சம் மதிப்புள்ள 703 கிராம் எடையுள்ள தங்கத்தைப் பறிமுதல் செய்தனா். இதனையடுத்து சுங்க வரித் துறையினா், தங்கம் கடத்திய 2 பேரையும் பஜ்பே போலீஸில் ஒப்படைத்தனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் பஜ்பே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.