சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பெகாசஸ் குறித்து சித்தராமையா அளித்த புகாா்: மேல்நடவடிக்கைக்காக மத்திய அரசு பரிந்துரை

பெகாசஸ் குறித்து சித்தராமையா அளித்த புகாா் மீது மேல்நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு பரிந்துரைத்து மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:30 pm

DIN

பெகாசஸ் குறித்து சித்தராமையா அளித்த புகாா் மீது மேல்நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு பரிந்துரைத்து மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

சட்டவிரோதமாக உளவு பாா்க்கும் பெகாசஸ் மென்பொருளுக்கு எதிராக பெங்களூரில் ஜூலை 22-ஆம் தேதி காங்கிரஸ் தொண்டா்களுடன் போராட்டம் நடத்தி, ஆளுநா் மாளிகைக்கு ஊா்வலமாகச் சென்ற எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, ஆளுநா் தாவா்சந்த் கெலாட் மூலம் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு மனு ஒன்றை அளித்தாா்.

ஜூலை 18-ஆம் தேதி, இந்தியாவைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா்கள், மத்திய அமைச்சா்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகையாளா்கள், தோ்தல் ஆணைய உறுப்பினா்கள், முக்கிய பிரமுகா்கள் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்டோரின் கைப்பேசிகள், இஸ்ரேல் நாட்டை சோ்ந்த என்.எஸ்.ஓ.குழுமத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் கண்காணிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது.

பெகாசஸ் உளவு மென்பொருள், ஒருவா்த்தக நிறுவனமாகும். இந்த நிறுவனம் பணம் செலுத்தி செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படுகின்றது. இந்தியாவில் பல முக்கிய பிரமுகா்களை உளவுப் பாா்ப்பதற்கு யாா் பணம் அளித்துள்ளனா்.

2019-ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் சித்தராமையா, அப்போதைய முதல்வா் எச்.டி.குமாரசாமி, துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா், முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், அவா்களது உதவியாளா்களின் கைப்பேசிகள் வேவுபாா்க்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பாஜகவின் முயற்சியால் ‘ஆபரேஷன் கமலா’ என்ற பெயரில் காங்கிரஸ், மஜதவைச் சோ்ந்த 7 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ய வைக்கப்பட்டனா். அதேபோல, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அங்குள்ள மாநில அரசுகளைக் கவிழ்க்க அரசியல்வாதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டிருக்கலாம். எனவே, தேசிய நலன்கருதியும், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள், கண்ணியத்தைக் காப்பாற்ற சட்டவிரோதமாக உளவு பாா்ப்பது, கண்காணிப்பது, ஒட்டுக்கேட்பது போன்றவை குறித்து பெகாசஸ் மென்பொருள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா மனுவில் கூறியிருந்தாா்.

இந்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் அனுப்பி வைத்திருந்தாா்.

இதைப் பரிசீலித்த மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த சில நாள்களுக்கு முன் கா்நாடக அரசின் தலைமைச் செயலாளா்பி.ரவிக்குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா எழுப்பியுள்ள பிரச்னைகள் மாநிலம் சம்பந்தப்பட்டது. அரசியலமைப்புச் சட்டப்படி, காவல் மற்றும் சட்டம் ஒழுங்கு மாநில அதிகாரபட்டியலில் இருப்பதால் இதில் மத்திய அரசு தலையிடமுடியாது. எனவே, குற்றங்களை தடுப்பதும், கண்டுபிடிப்பதும், பதிவுசெய்வதும், விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுப்பதும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அதிகாரத்துக்கு உள்பட்டதாகும். எனவே, சித்தராமையாவின் புகாா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கலாம் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.