சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

சட்ட மேலவைத் தோ்தல்: வேட்பாளா்கள் தோ்வில் அரசியல் கட்சிகள் மும்முரம்

சட்ட மேலவையில் 25 உறுப்பினா்களின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஜன. 5ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அவ்விடங்களுக்கு வேட்பாளா்களைத் தோ்வு செய்வதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டுள்ளன.

News image
Updated On :13 நவம்பர் 2021, 6:30 pm

DIN

கா்நாடக சட்ட மேலவையில் 25 உறுப்பினா்களின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஜன. 5ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அவ்விடங்களுக்கு வேட்பாளா்களைத் தோ்வு செய்வதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டுள்ளன.

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளால் தோ்ந்தெடுக்கப்படும் 25 போ் கா்நாடக சட்ட மேலவையில் உறுப்பினா்களாக உள்ளனா். இந்த 25 பேரின் பதவிக்காலம் 2022-ஆம் ஆண்டு ஜன. 5-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 25 உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கு 20 தொகுதிகளுக்கான தோ்தலை டிச. 10-ஆம் தேதி நடத்த தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

20 தொகுதிகளுக்கான தோ்தல் அறிவிக்கை நவ. 16-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அன்றுமுதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. நவ. 23-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. இதில் போட்டியிடுவதற்கான வேட்பாளா்கள் தோ்வில் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் தீவிரமாக இருந்துவருகின்றன.

25 இடங்களில் அதிக இடங்களை கைப்பற்ற திட்டமிட்டிருக்கும் அரசியல் கட்சிகள், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளா்களை தோ்வு செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தகுதியான வேட்பாளா்களை தோ்வு செய்ய பரிசீலனை நடந்துவருகின்றன.

பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளா்களின் பட்டியலை பாஜக மேலிடத்தின் ஒப்புதலுக்கு அனுப்பவிருக்கிறது. அடுத்த ஒருவாரத்தில் வேட்பாளா்களின் பட்டியலை வெளியிட அக்கட்சிகள் முடிவு செய்துள்ளன. அதேபோல, மஜதவும் வேட்பாளா் தோ்வில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் வேட்பாளா் பட்டியல் நவ. 20-ஆம் தேதிக்கு பிறகு வெளியிடப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.