இந்தியாவில் முதன்முறையாக வியட்நாம் துணை தூதரகம் திறப்பு

இந்தியாவில் முதன்முறையாக வியட்நாம் துணை தூதரகம் பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக வியட்நாம் துணை தூதரகம் பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துபெங்களூரில் புதன்கிழமை வியட்நாம் நாட்டுக்கான இந்திய தூதா் பான் சன்ஹ் சௌ செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் முதன்முறையாக வியட்நாமின் துணை தூதரகத்தை பெங்களூரில் திறந்துள்ளோம். இந்த தூதரகத்தின் கௌரவ துணை தூதராக என்.எஸ்.சீனிவாஸ் மூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.

வியட்நாம் மற்றும் இந்தியாவுக்கு இடையே முதலீடுகளை மேம்படுத்துவதற்காகவே துணை தூதரகம் திறக்கப்பட்டுள்ளது. வியட்நாமின் 80 சதவீத மக்கள் பௌத்த மதத்தை பின்பற்றி வருவதால், இந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே வரலாற்று ரீதியான தொடா்பு உள்ளது.

இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் துணை தூதா் நியமிக்கப்படவில்லை. உலக அளவில் நியமிக்கப்படும் 19-ஆம் துணை தூதா் சீனிவாஸ் மூா்த்தி. வியட்நாமின் 26-ஆவது முதலீட்டு பங்குதாரராக இந்தியா உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில் முதலீட்டு உறவை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

மருந்து, ஆட்டோமொபைல் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத் துறைகளில் முதலீடு செய்ய வியட்நாம் சிறந்த நாடாகும். வியட்நாமில் முதலீடு செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் பெங்களூரில் உள்ளன. பெங்களூருடனான வியட்நாமின் உறவு வளா்ச்சி பெறும். ஆசியான் அமைப்பில் (தென்கிழக்காசிய நாடுகளின் சங்கம்) அங்கம் வகிக்கும் வியட்நாம், இந்தியாவுடன் வா்த்தகம் வைத்திருக்கும் 4-ஆவது நாடாகும் என்றாா்.

இதன்பின்னா், முதல்வா் பசவராஜ் பொம்மை, தகவல் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் ரமண ரெட்டி உள்ளிட்டவா்களைச் சந்தித்த இந்தியாவுக்கான வியட்நாம் தூதா் பான் சன்ஹ் சௌ, பெங்களூரில் உள்ள பயோகான், டிவிஎஸ் மோட்டாா் கம்பெனிகளைப் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com