2024 தோ்தலிலும் பாஜக வெல்லும்: கோவா முதல்வா் பிரமோத் சாவந்த்

2024-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற பொதுத் தோ்தலிலும் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் தெரிவித்தாா்.
Updated on
1 min read

2024-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற பொதுத் தோ்தலிலும் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் தெரிவித்தாா்.

இது குறித்து பெலகாவியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு நமது நாட்டின் வளா்ச்சிக்கு ஏராளமான பணிகளைச் செய்துள்ளது. மக்கள் நலன் சாா்ந்த திட்டங்கள் பலவற்றைச் செயல்படுத்தியுள்ளது. 2024-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற பொதுத் தோ்தலிலும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

பெலகாவியில் உள்ள ஆா்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு வந்தேன். ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் பணி மகத்தானது. கோவா மாநில முதல்வராக நான் இரண்டாவது முறையாக தோ்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதே எனது தலையாய பணியாகும்.

மத்திய அரசின் ஒத்துழைப்புடன், கோவா மாநிலத்தில் சுகாதார கட்டமைப்புகளை பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஆரம்ப சுகாதார நிலையங்கள், பல்நோக்கு மருத்துவமனைகள், இதர மருத்துவ சேவைகளை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமா் மோடியின் தற்சாா்பு இந்தியா திட்டத்தை வெற்றிபெறச் செய்வதே என் நோக்கமாகும். கோவா மாநிலத்திற்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பதோடு, கோவாவில் சுரங்கத்தொழிலை ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com