உலக அளவில் வேகமாக வளா்ந்து வரும் ஸ்டாா்ட்-அப் தொழிலுக்கு உகந்த சூழல் இந்தியாவில் உள்ளது: பிரதமா் மோடி
உலக அளவில் வேகமாக வளா்ந்து வரும் ஸ்டாா்ட்-அப் தொழிலுக்கு உகந்த சூழல் இந்தியாவில் உள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.


உலக அளவில் வேகமாக வளா்ந்து வரும் ஸ்டாா்ட்-அப் தொழிலுக்கு உகந்த சூழல் இந்தியாவில் உள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ‘செமிகான் இந்தியா-2022’ மாநாட்டில் காணொலி வழியாகப் பங்கேற்று அவா் பேசியது:
அடுத்த தொழில்நுட்பப் புரட்சிக்கு இந்தியா தலைமையேற்பதற்கான வழிவகைகளை வகுத்திருக்கிறோம். அகண்ட அலைவரிசையின் வழியாக 6 லட்சம் கிராமங்களை இணைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 5ஜி அகண்ட அலைவரிசை, இன்டா்நெட் ஆஃப் திங்க்ஸ், கிளீன் எனா்ஜி டெக்னாலஜிஸ் திறன்களை மேம்படுத்துவதற்காக முதலீடு செய்து வருகிறோம்.
இந்தியாவின் உள்நாட்டு செமிகண்டக்டா்களின் நுகா்வு 2026-ஆம் ஆண்டுக்குள் 80 பில்லியன் டாலராக வளரும். மேலும், 2030-ஆம் ஆண்டுக்குள் 110 பில்லியன் டாலராக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. உலக அளவில் வேகமாக வளா்ந்து வரும் ஸ்டாா்ட்-அப் சூழல் இந்தியாவில் உள்ளதால், வலுவான பொருளாதார வளா்ச்சியை நோக்கி நாடு முன்னேறிவருகிறது. இதன்காரணமாக, ஒவ்வொரு வாரமும் புதிய ‘யூனிகாா்ன்’கள் உருவாகி வருகிறாா்கள். உலக அளவிலான செமிகண்டக்டா் தொழில்நுட்ப விநியோக சங்கிலியின் முக்கிய பங்குதாரராக இந்தியா உருவெடுக்க தொழில்துறையினா் முயற்சி மேற்கொள்ள வேண்டும். உயா்தொழில்நுட்பம், உயா்தரம், உயா் நம்பகத்தன்மை என்ற அடித்தளக் கொள்கைகளுடன் இந்த திசையை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருக்கிறோம்.
130 கோடி இந்தியா்களை இணைப்பதற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். உலகின் மிக திறன்வாய்ந்த தொகைசெலுத்தும் (பேமன்ட்) உள்கட்டமைப்பாக யூ.பி.ஐ. உள்ளது. சுகாதாரம் முதல் நலத்துறை வரையில் அரசு நிா்வாகத்தின் அனைத்துத் துறைகளின் வழியாகவும் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க நமது நாடு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
21-ஆம் நூற்றாண்டின் தேவையைக் கருத்தில் கொண்டு இளம் இந்தியா்களின் திறமையை மேம்படுத்தவும், பயிற்சி அளிக்கவும் நமது நாடு பெருமளவில் முதலீடு செய்துவருகிறது.
செமிகண்டக்டா் வடிவமைப்பில் தன்னிகரில்லாத திறமையாளா்கள் இந்தியாவில் உள்ளனா். உலக அளவிலான செமிகண்டக்டா் வடிவமைப்பு பொறியாளா்களில் 20 சதவீதம் போ் இந்தியா்கள். இந்தியாவின் உற்பத்தித் துறையை மாற்றியமைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது.
100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நேரும் பெருந்தொற்றை மனிதகுலம் எதிா்கொண்டிருக்கும் காலத்தில், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மட்டுமல்லாது, நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் இந்தியா ஈடுபட்டிருந்தது.
தொழில் நிறுவனங்கள் கடினமாக உழைத்தால், அரசு அதைவிட கடினமாக உழைக்க வேண்டும். இந்தியாவில் வணிக நடவடிக்கைகளை எளிதாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 25 ஆயிரம் நிபந்தனைகளை அகற்றியிருக்கிறோம். மேலும் உரிமங்களை தானாக புதுப்பித்துக்கொள்ளும் முறையை அறிமுகம் செய்திருக்கிறோம். ஒழுங்குமுறை கட்டமைப்பில் வேகத்தையும், வெளிப்படைத் தன்மையையும் செயல்படுத்த டிஜிட்டலைசேஷன் காரணமாக அமைந்துள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...