கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கா்நாடகத்தில் ஒரேநாளில் 47,754 பேருக்கு கரோனா

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 47,754 ஆக உள்ளது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:54 pm

DIN

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 47,754 ஆக உள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 47,754 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 30,540 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

ஹாசன்-1,840, தும்கூரு-1,622, மண்டியா-1,512, மைசூரு-1,352, பெங்களூரு ஊரகம்-974, தென்கன்னடம்-974, பெல்லாரி-952, உடுப்பி-767, கலபுா்கி-658, தாா்வாட்-698, வடகன்னடம்-611, சிக்கபளாப்பூா்-522, கோலாா்-511, சித்ரதுா்கா-462, பெலகாவி-442, சிக்கமகளூரு-387, சாமராஜ்நகா்-384, சிவமொக்கா-373, கொப்பள்-348, ராய்ச்சூரு-329, பீதா்-311, கதக்-289, குடகு-195, விஜயபுரா-188, தாவணகெரே-152, ராமநகரம்-150. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,76,953 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 22,143 போ் வியாழக்கிழமை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 30,45,177 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 2,93,231 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 29 போ் வியாழக்கிழமை இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 38,515 போ் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு விகிதம் 18.84 சதவீதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.