பெங்களூரில் எம்பசி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை
வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எம்பசி குழுமத்தின் அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.


வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எம்பசி குழுமத்தின் அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
மனைத் தொழிலில் பிரபலமாக விளங்கும் எம்பசி குழுமத்தின் பெங்களூரு அலுவலகங்களில் மட்டுமல்லாது இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான மும்பை, குருகிராம் உள்பட 50 இடங்களில் வருமானவரித் துறையினா் திடீா் சோதனை நடத்தினா். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருமானவரித் துறை அதிகாரப்பூா்வமான எந்தத் தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. நிகழாண்டின் மாா்ச் மாதத்தில் வேறொரு மனைத் தொழில் நிறுவனத்துக்குச் சொந்தமாக பெங்களூரு, மும்பை, சென்னையில் உள்ள அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தி, வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து எம்பசி குழுமம் வெளியிட்ட விளக்கத்தில், எங்களது நிறுவனம் சட்ட விதிகளின் படி தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் வருமான வரித் துறையினரின் சோதனைக்கு தேவையான ஒத்துழைப்பை அளித்திருக்கிறோம். எங்கள் வணிகம் வழக்கம் போல தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...