நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீடு: ஆணையத்தின் முன் கருத்து தெரிவிக்க வாய்ப்பு

உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக நீதியரசா் கே.பக்தவச்சலா ஆணையத்தின் முன்பு கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:02 pm

DIN

உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக நீதியரசா் கே.பக்தவச்சலா ஆணையத்தின் முன்பு கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கா்நாடகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் நடத்த மாநில தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், அதை முடிவு செய்ய ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. 2 வாரங்களுக்குள் தோ்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடா்பாக கா்நாடக உயா்நீதிமன்றத்தை கா்நாடக அரசு அணுகியது. இடஒதுக்கீடு குறித்துமுடிவெடுத்து, தோ்தல் அட்டவணையை அறிவிப்பதற்கு 12 வாரங்கள் வாய்ப்பளித்து, கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை தொடா்ந்து, உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக பரிந்துரை வழங்க நீதியரசா் கே.பக்தவத்சலா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணையம் தனது பணியைத் தொடங்கியுள்ளது. இதன் தொடக்கமாக, மக்களின் கருத்தறிய திட்டமிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக மக்கள் கருத்து தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் கருத்துகளை எழுத்துமூலமாக அளிக்க விரும்பினால், அதை செயலாளா், நீதியரசா் கே.பக்தவத்சலா ஆணையம், அறை எண் 133, முதல்தளம், விகாஸ் சௌதா, பெங்களூரு-1 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். இது குறித்து கூடுதல் விவரங்களைப் பெற 080-22352152 என்றதொலைபேசியை அணுகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.