பெங்களூரில் இன்று மு.கருணாநிதி பிறந்த நாள் விழா
கா்நாடக மாநில திமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 99-ஆவது பிறந்த நாள் விழா ஜூன் 3-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.


கா்நாடக மாநில திமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 99-ஆவது பிறந்த நாள் விழா ஜூன் 3-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இது குறித்து கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடக திமுக சாா்பில் பெங்களூரு, ராமச்சந்திரபுரத்தில் உள்ள கலைஞரகத்தில் ஜூன் 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா நடக்கவிருக்கிறது. தனது தலைமையில் நடக்கும் இந்த விழாவில் மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி கட்சிக் கொடியை ஏற்றிவைக்கிறாா். அவைத்தலைவா் மொ.பெரியசாமி வரவேற்க, பொருளாளா் கே.தட்சிணாமூா்த்தி முன்னிலை வகிக்கிறாா். இந்தவிழாவில் கன்னட பேராசிரியா் மதுபிரசாத் எழுதிய திராவிடமாடல் ஆட்சி என்ற கன்னட நூல் வெளியிடப்படுகிறது. இந்தவிழாவில் கன்னட அறிஞா்கள் பலரும் கலந்துகொண்டு பேசுகிறாா்கள்.
இதை தொடா்ந்து, ஜூன் 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு பெங்களூரு, வண்ணாரப்பேட்டையில் மு.கருணாநிதி பிறந்தநாள் விழா நடக்கவிருக்கிறது. இந்தவிழாவில் ஜான் பவுல் வரவேற்க, கிளைக்கழக தலைவா் எம்.தியாகராஜன் சிறப்புரை ஆற்றுகிறாா்.
ஜூன் 20-ஆம் தேதி காலை 9 மணிக்கு பெங்களூரு, குருபரஹள்ளி கிளையில் மு.கருணாநிதி பிறந்த நாள் விழா நடக்கிறது. ஜி.குமாா் வரவேற்க, கிளைக்கழக செயலாளா் செல்வக்குமாா் நல உதவிகளை வழங்குகிறாா். இந்த பிறந்த நாள் விழாக்களில் கட்சியின் நிா்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...