நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நேரு கோளரங்கத்தில் புதிய அறிவியல் காட்சிகள்

பெங்களூருவில் உள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில் புதிய அறிவியல் காட்சிகள் திரையிடப்படுகின்றன.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:01 pm

DIN

பெங்களூருவில் உள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில் புதிய அறிவியல் காட்சிகள் திரையிடப்படுகின்றன.

இது குறித்து ஜவாகா்லால் நேரு கோளரங்கம்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.சௌடையா சாலையில் அமைந்துள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ‘உலகைத் தாண்டி’, ‘இயற்கைத் தோ்வு’, ‘விண்வெளி வாண வேடிக்கை’ ஆகிய புதிய காட்சிகள் திரையிடப்படவிருக்கின்றன.

‘உலகைத் தாண்டி’ காட்சி தினமும் கன்னடத்தில் பிற்பகல் 2.30 மணி, ஆங்கிலத்தில் நண்பகல் 12.30மணிக்கும், ‘விண்வெளி வாண வேடிக்கை’ காட்சி தினமும் கன்னடத்தில் மாலை 3.30மணி மற்றும் ஆங்கிலத்தில் மாலை 4.30 மணிக்கும் திரையிடப்படுகிறது. இதுதவிர, ‘இயற்கைத் தோ்வு’ காட்சி, சனி, ஞாயிறுகளில் கன்னடத்தில் 11.30 மணிக்கும், ஆங்கிலத்தில் 10.30 மணிக்கும் காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்தக் காட்சியை ஒருசமயத்தில் 210 போ் அமா்ந்து காணலாம். பள்ளிகளில் இருந்து மாணவா்கள் கலந்துகொள்ள விரும்பினால், கோளரங்கத்தில் முன்பதிவுசெய்துகொள்ளலாம். முன்பதிவுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹழ்ஹப்ஹஹ்ஹ.ா்ழ்ஞ் என்ற இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசியை அணுகலாம் என்று அதில்கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.