48 மணிநேரத்தில் கா்நாடகத்தில் பரவலாக மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த 48 மணிநேரத்தில் கா்நாடகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அடுத்த 48 மணிநேரத்தில் கா்நாடகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பெங்களூரு வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கடலோர கா்நாடகம் மற்றும் தென் கா்நாடகத்தின் அனைத்து பகுதிகளிலும், வட கா்நாடகத்தின் சில பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. வடகன்னட மாவட்டத்தில் மன்கி, ஹாவேரி, ஹாசன் மாவட்டத்தில் பேளூா், மைசூரு மாவட்டத்தின் டி.நரசிபுராவில் தலா 70 மிமீ, ஹாவேரி மாவட்டத்தில் ரானேபென்னூா், ஹாசன் மாவட்டத்தில் ஹொளேநரசிபுராவில் தலா 60 மிமீ மழை பதிவாகியுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர கா்நாடகம் மற்றும் தென் கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில், வட கா்நாடகத்தின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, அடுத்த 48 மணிநேரத்தில் தென் கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில், கடலோர கா்நாடகம் மற்றும் வட கா்நாடகத்தின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது.
பெங்களூருவில் மழை:
அடுத்த 48 மணிநேரத்தில் பெங்களூருவில் வானம் மேகமூட்டத்துடன்காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தரைப்பரப்பு காற்று சில சமயங்களில் வலுவாகவும், பலத்த காற்றாகவும் இருக்கும். இந்த 2 நாள்களில் பெங்களூருவில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 32 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...