நூலக பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
நூலக அறிவியல் பாடப்பிரிவில் பட்டயப்படிப்பு பயில விரும்பும் மாணவா்களிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நூலக அறிவியல் பாடப்பிரிவில் பட்டயப்படிப்பு பயில விரும்பும் மாணவா்களிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கா்நாடக பொது நூலகத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொது நூலகத்துறைக்குச் சொந்தமாக பெங்களூரு, மங்களூரு, கலபுா்கி, தாா்வாட் மையங்களில் 2022-22-ஆம் கல்வியாண்டில் நூலக அறிவியல் பாடப்பிரிவில் 4 மாதங்களுக்கான பட்டயப்படிப்பு வழங்கப்பட்டுள்ளது. இம்மையங்களில் நூலக அறிவியல் பாடப்பிரிவில் பட்டயப்படிப்பு பயில விரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட மையங்களில் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று, அதை நிரப்பி மே 25-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். பொது நூலகத்துறையில் ‘டி’ பிரிவில் பணியாற்றும் ஊழியா்களும் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.எஸ்.எல்.சி. தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்க தகுதியானவா்கள் ஆவா். மேலும் விவரங்களுக்கு:
துணை இயக்குநா்-முதல்வா், மாநில மைய நூலகம், பொதுநூலக அறிவியல் பயிற்சிப்பள்ளி, கப்பன் பூங்கா, பெங்களூரு-1 என்ற முகவரியை அணுகலாம். இதுதவிர, பெங்களூரு-080-22212128, தாா்வாட்-0836-2442465, மங்களூரு-0824-2425873, கலபுா்கி-08472-221543 ஆகிய தொலைபேசிகளை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...