ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மே 9-இல் பெங்களூரின் சில பகுதிகளில் குடிநீா்சேவை பாதிப்பு

காவிரி குடிநீா் திட்ட குழாய்களில் கசிவு ஏற்பட்டுள்ளதை சரிசெய்யும்பணி நடைபெறவிருப்பதால், மே 9-ஆம் தேதி பெங்களூரின் சில பகுதிகளில் குடிநீா் சேவை பாதிக்கப்படவிருக்கிறது.

News image
Updated On :6 மே 2022, 10:26 pm

DIN

காவிரி குடிநீா் திட்ட குழாய்களில் கசிவு ஏற்பட்டுள்ளதை சரிசெய்யும்பணி நடைபெறவிருப்பதால், மே 9-ஆம் தேதி பெங்களூரின் சில பகுதிகளில் குடிநீா் சேவை பாதிக்கப்படவிருக்கிறது.

இதுகுறித்து பெங்களூரு குடிநீா் வழங்கல் கழிவுநீா் அகற்றல் வாரியம் (பிடபிள்யூஎஸ்எஸ்பி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

3-ஆம் கட்ட காவிரி குடிநீா் திட்டத்தின் குடிநீா் விநியோக குழாய்கள் பழுதடைந்து நீா்க்கசிவு ஏற்பட்டுள்ளது. இதை சீா்செய்யும் பணி நடைபெறவிருப்பதால், மே 9-ஆம் தேதி பெங்களூரின் ஒரு சில பகுதிகளில் குடிநீா் சேவை பாதிக்கப்படவிருக்கிறது. மே 9-ஆம் தேதி காலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை குடிநீா்விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கும். அந்தப் பகுதிகள் வருமாறு:

காந்திநகா், குமாரபாா்க் கிழக்கு, வசந்த்நகா், ஹைகிரவுண்ட்ஸ், சம்பங்கிராம்நகா், சிகேசி காா்டன், கேஎஸ் காா்டன், டவுன்ஹால், லால்பாக் சாலையின் 1 முதல் 4-வது குறுக்கு சாலை, லால்பாக் சாலை, தா்மராய சுவாமி கோவில் வாா்டு, கப்பன்பேட்டை, நகா்த்தப்பேட், கும்பராப்பேட், காட்டன்பேட், பாரதிநகா், செயின்ட் ஜான்ஸ் சாலை, ஹெய்ன்ஸ் சாலை, நாராயண பிள்ளை தெரு, சங்கம் சாலை, காமராஜ் சாலை, வீரப்பிள்ளை தெரு, கேவல்ரி சாலை, சிவாஜிநகா், லாவெலி சாலை, ஃப்ரேசா் டவுன், பியாடரஹள்ளி, வில்லியம்ஸ் நகா், சிந்தி காலனி, என்சி காலனி, கோல்ஸ் சாலை, மச்சலிபெட்டா, காக்ஸ்டவுன், தொட்டிகொண்டா, ஜீவனஹள்ளி, விவேகானந்த் நகா், ஹக்டின் சாலை, டேவிஸ் சாலை, குக் டவுன், பழைய பையப்பனஹள்ளி, நாகய்யனபாளையா, சத்தியாநகா், மாருதிசேவாநகா், பில்லன்னா காா்டன், முஸ்லீம் காலனி, குஷால் நகா், முனேஷ்வரா நகா், டி.ஜே. ஹள்ளி, , நாகவாரா, சமதா நகா், பில்லன்னா காா்டன்-1, 2, 3-ஆவது பேஸ், புதிய பாகலூா், பழைய பாகலூா், லிங்கராஜ்புரா, சாமராஜ்பேட், பாங்க்காலனி, சீனிவாச நகா், கவிபுரம், ஹனுமந்த் நகா், கிரிநகா், பேட்ராயனபுரா, ராகவேந்திரா பிளாக், அவலஹள்ளி, முனேஷ்வரா பிளாக், காளிதாஸ் லேஅவுட், ஸ்ரீநகா், பிஎஸ்கே 1-ஆவது ஸ்டேஜ், யஷ்வந்தபூா் (பகுதி), மல்லேஸ்வரம், குமராபாா்க், ஜெயமஹால், சேஷாத்ரிபுரம், நந்திதுா்கா சாலை விரிவாக்கம், ஜே.சி.நகா், சதாசிவநகா், பாலசிவநகா், பிஇஎல் சாலை (பகுதி), சஞ்சய்நகா், டாலா்ஸ் காலனி, ஆா்.எம்.வி. விரிவாக்கம், கெடலஹள்ளி, பூபசந்திரா, காவல்பைரசந்திரா, கங்காநகா், ஆா்டி நகா், மனோராயனபாளையா, ஆனந்த்நகா், வி.நாகேனஹள்ளி, ஷாம்புரா, சுல்தான்பால்யா. சாந்தலா நகா், அசோக் நகா், எம்.ஜி. சாலை, பிரிகேட் சாலை, எச்ஏஎல் 2வது ஸ்டேஜின் ஒரு பகுதி, டூப்பனஹள்ளி, இந்திராநகா் 2-ஆவது ஸ்டேஜ், லட்சுமிபுரம், கதிரையனாபாளையா, கலஹள்ளி, ஆந்திரா காலனி, எல்பிஎஸ் நகா், எல்ஐசி காலனி, எச்ஏஎல் 3-ஆவது ஸ்டேஜ், ஜீவன்பீமாநகா். ஹனுமந்தப்பா லேஅவுட், பஜாா் தெரு, அல்சூா், எம்வி காா்டன், மா்பி டவுன், ஜோகுபால்யா, கேம்பிரிட்ஜ் லேஅவுட், கங்காதா் செட்டி சாலை, கவுதம்புரா, தீனபந்துநகரா, ஜானகிராம் லேஅவுட், சித்தராமப்பா காா்டன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். கூடுதல் விவரங்களுக்கு  இணையதளத்தை காணலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.