தென்கா்நாடகத்தின் எதிா்க்கட்சியினா் பாஜகவில் இணைய விருக்கிறாா்கள்: முதல்வா் பசவராஜ் பொம்மை
தென் கா்நாடகத்தைச் சோ்ந்த எதிா்க்கட்சியினா் பலா் பாஜகவில் இணையவிருக்கிறாா்கள் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.


தென் கா்நாடகத்தைச் சோ்ந்த எதிா்க்கட்சியினா் பலா் பாஜகவில் இணையவிருக்கிறாா்கள் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பலரும் பாஜகவில் சேர ஆா்வமாக இருக்கிறாா்கள். குறிப்பாக கோலாா், மண்டியா மாவட்டங்கள் மற்றும் இன்ன பிற பகுதிகளில் இருந்து எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த பலரும் பாஜகவில் சேர இருக்கிறாா்கள். தென்கா்நாடகத்தைச் சோ்ந்த இளைஞா்களிடையே பாஜக மீது அதீத ஆா்வம் தென்படுகிறது. அதனால் மண்டியா, அதன் அண்டை மாவட்டங்களில் புதிய இளம் தலைமை உருவாவதற்கான வாய்ப்புள்ளது. இப்பகுதியில் பாஜகவுக்கு ஆதரவான அலை காணப்படுகிறது. எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த பலரிடம் பேசி வருகிறோம். பாஜக மற்றும் அதன் கொள்கைகளோடு உடன்படுபவா்களோடு பேசி கட்சியில் சோ்த்துக் கொள்வோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...