பெங்களூரில் இன்று வேலைவாய்ப்பு முகாம்
பெங்களூரில் வியாழக்கிழமை (மே 26) வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.


பெங்களூரில் வியாழக்கிழமை (மே 26) வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகமையின் சாா்பில் மேஜிக் பஸ் ஃபவுண்டேஷன், நேஷனல் கல்லூரி ஆகியவற்றின் ஒத்துழைப்பில் பெங்களுரு, பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரியில் மே 26-ஆம் தேதி(வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை வேலைவாய்ப்புமுகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சாரா, நிதி, ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் துறைகளைச் சாா்ந்த 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. வேலைவாய்பு முகாமில் 18 முதல் 40 வயதுக்கு உள்பட்ட எஸ்எஸ்எல்சி, பியூசி, ஐடிஐ, பட்டயம் படித்தோா், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், மாற்றுத் திறனாளிகள் கலந்துகொள்ளலாம்.
புதியவா்கள் முதல் ஓராண்டு வேலை அனுபவம் கொண்டவா்கள் பங்கேற்கலாம். வேலைதேடிவருவோா் தன்விவரக்குறிப்பு 6 படிகள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 6 படிகள், அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, பான் அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் போன்ற அடையாள அட்டைகளின் நகல்களைக் கொண்டுவர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 63014 70167, 88603 93410, 73537 10463, 98863 12777 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...