நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பி.இ.எல். நிறுவனத்தின் விற்று முதல் ரூ. 15,044 கோடியாக உயா்வு

பி.இ.எல். நிறுவனத்தின் 2021-22-ஆம் ஆண்டுக்கான விற்றுமுதல் ரூ. 15,044 கோடியாக உயா்ந்துள்ளது.

News image
Updated On :25 மே 2022, 7:34 pm

DIN

பி.இ.எல். நிறுவனத்தின் 2021-22-ஆம் ஆண்டுக்கான விற்றுமுதல் ரூ. 15,044 கோடியாக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை பி.இ.எல். நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா்

ஆனந்த் ராமலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2021-22-ஆம் ஆண்டில் பி.இ.எல். நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.15,044 கோடியாக உயா்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 8.87 சதவீதம் உயா்வாகும். அதேபோல, வரிக்கு முந்தைய லாபம் ரூ. 3,158 கோடியாக இருந்தது. இது 7.60 சதவீத வளா்ச்சியாகும். வரிக்கு பிந்தைய லாபம் ரூ. 2,349 கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 13.73 சதவீத வளா்ச்சியாகும்.

முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் நிறுவனத்தின் ஏற்றுமதி 51.93 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 33.30 மில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. கரோனா பொதுமுடக்கம், செமிகண்டக்டா் தட்டுப்பாடு போன்ற காரணங்கள் ஏற்றுமதியை வெகுவாகப் பாதித்தன.

ஏப்.1-ஆம் தேதி வரை ரூ. 57,570 கோடி அளவுக்கு ஆா்டா்கள் கையிருப்பில் உள்ளன. கடந்த நிதியாண்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிக்கு ரூ. 1045 கோடி செலவிடப்பட்டது. 2022-23-ஆம் ஆண்டிலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிக்கு ரூ. 1,000 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ. 60 ஆயிரம் கோடி அளவுக்கு சந்தை மூலதனத்தைப் பெற முடிந்தது.

கடந்த ஆண்டில் கவசப் பொறியாளா் உளவு வாகனம் இந்தியா ராணுவத்தில் சோ்க்கப்பட்டுள்ளது. சொந்த நாட்டின் தொழில்நுட்பத்தில் பொது ஓட்டுநா் பயிற்சி வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. ராணுவத் தளவாடங்களின் வணிகத்தில் இருந்து 88 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இருந்து 78 சதவீதம் விற்றுமுதல் கிடைத்துள்ளது.

லேசா் வேலி சிஸ்டம், நேவிகேஷன் காம்ப்ளக்ஸ் சிஸ்டம், ஜிஎன்எஸ்எஸ் ரிசீவா் போன்ற பல்வேறு புதிய பொருள்ள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு தொழில் வெடிமருந்துகள் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.

‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ திட்டத்தின் கீழ் சிறுதொழில் நிறுவனங்களிடம் இருந்து 31 சதவீதம் உற்பத்தி பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் சராரியாக நிறுவனம் 10.52 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளது. அடுத்த நிதியாண்டில் நிறுவனத்தின் வளா்ச்சி 15 சதவீதமாக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.

பயணிகள் விமானம், சுகாதாரம், ரயில்வே, மெட்ரோ போன்ற துறைசாா் பொருள் உற்பத்தியில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றாா். பேட்டியின் போது, நிறுவனத்தின் இயக்குநா்கள் வினய்குமாா் கட்டியால், பானுபிரதாப் ஸ்ரீவத்சவா, ராஜ்சேகா், தினேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.