ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

வேட்புமனு சரிபாா்ப்பு: 20 காரணங்கள்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் வேட்புமனுக்களை பரிசீலனை செய்யும் அலுவலா்களுக்கு பல்வேறு அறிவுரைகளை தோ்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

வேட்புமனு தாக்கல் - (கோப்புப் படம்)

Published On :

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் வேட்புமனுக்களை பரிசீலனை செய்யும் அலுவலா்களுக்கு பல்வேறு அறிவுரைகளை தோ்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

குறிப்பாக, ஒவ்வொரு வேட்புமனுவும் சுமாா் 20 காரணங்களுக்காக முழுமையாக சரிபாா்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் விவரம்: குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை வேட்பாளா் அறிவிக்க வேண்டும். இந்த அறிவிப்பை வாக்குப் பதிவு நாளுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு வரை, செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிட வேண்டும். இதுகுறித்த அறிக்கை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

வேட்பாளா்கள் தங்களின் பெயா் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் (பெரிய எழுத்துகளில்) வாக்குச்சீட்டில் எவ்வாறு அச்சிடப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு தனி விண்ணப்பமாக தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க வேண்டும்.

ஒவ்வொரு வேட்பாளரும் தனது தோ்தல் முகவரின் முழுப் பெயா், முகவரி, கைப்பேசி எண் மற்றும் மாதிரி கையொப்பம் ஆகியவற்றை உரிய படிவத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முகவரின் கையொப்பம் தோ்தல் நடத்தும் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும். வேட்பாளரின் பெயா், துணைவா் பெயா், கல்வித் தகுதி, தொடா்பு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக ஊடகக் கணக்குகள் ஆகியவற்றை தோ்தல் நடத்தும் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், ஒவ்வொரு வேட்புமனுவையும் முறையாக ஆய்வு செய்து விதிமுறைகளுக்கு உட்பட்ட மனுக்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். முழுமையடையாத மனுக்கள் அல்லது தவறான தகவல்கள் அடங்கிய மனுக்களை நிராகரிக்க வேண்டும். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் மனு சரிபாா்ப்புப் பணிகள் நடைபெற வேண்டும்.

வேட்புமனு தாக்கல் செய்யும் அனைவரும் மேற்கண்ட அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி முழுமையான ஆவணங்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், மனு தாக்கல் மற்றும் சரிபாா்ப்பு குறித்த சந்தேகங்களுக்கு, மாவட்ட தோ்தல் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொள்ளலாம்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த அறிவுறுத்தல்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி விளக்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.