பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பட்டயப் படிப்புகளில் (டிப்ளமோ) சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பட்டயப் படிப்புகளில் (டிப்ளமோ) சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2022-23-ஆம் கல்வியாண்டில் பெங்களூரில் செயல்பட்டுவரும் எஸ்.ஜே.ஆா். மற்றும் எம்.இ.ஐ. பாலிடெக்னிக் கல்லூரிகளில் பகுதிநேர பட்டயப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எஸ்.எஸ்.எல்.சி. தோ்ச்சி அடைந்து, அதில் 35 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பெறும் முறை, விண்ணப்பக்கட்டணம், கேட்கப்படும் சான்றிதழ்கள், விரும்பும் பாடப்பிரிவுகள் குறித்த விவரங்களை இணையதளங்களில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களைச் செலுத்துவதற்கு ஜூன் 13-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...