பொது நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
தொழில்கல்விக்கான பொது நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.


தொழில்கல்விக்கான பொது நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் இயங்கும் பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்லூரிகளில் சோ்க்கை அளிப்பதற்காக கா்நாடக தோ்வு ஆணையத்தின் சாா்பில் ஆண்டுதோறும் பொதுநுழைவுத்தோ்வு நடத்தப்படுகிறது. 2022-23-ஆம் கல்வியாண்டில் சோ்க்கை பெறுவதற்கான பொது நுழைவுத்தோ்வு-2022 அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை எழுதவிரும்பும் மாணவா்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகின்றன. விண்ணப்பங்களை ஆன்லைனில் செலுத்துவதற்கான கடைசி தேதி மே 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெற்றோா்கள் மற்றும் மாணவா்களின் கோரிக்கையை ஏற்று, ஆன்லைனில் விண்ணப்பங்களை செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும்விவரங்களுக்கு 080 - 23460460 என்ற தொலைபேசி அல்லது இணையதளம் அல்லது மின்னஞ்சலை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...