நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவுடன் தெலங்கானா முதல்வா் சந்திரசேகர்ராவ் சந்திப்பு

முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவை அவரது இல்லத்தில் தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ் சந்தித்து, தேசிய அளவில் மூன்றாம் அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளாா்

News image
Updated On :26 மே 2022, 6:17 pm

DIN

முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவை அவரது இல்லத்தில் தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ் சந்தித்து, தேசிய அளவில் மூன்றாம் அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளாா்.

தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளை இணைத்து மூன்றாம் அணியை அமைக்க திட்டம் வகுத்து செயல்பட்டுவரும் தெலங்கானா மாநில முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான கே.சந்திரசேகா் ராவ், பல்வேறு தலைவா்களைச் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறாா். அந்த வகையில், பெங்களூருக்கு வியாழக்கிழமை வருகைதந்த சந்திரசேகா் ராவ், பத்மநாபநகரில் உள்ள வீட்டில் முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவை சந்தித்துப் பேசினாா். இருவரும் மதிய உணவை உட்கொண்டனா். அதன்பிறகு, இருவரும் தேசிய அரசியல், மூன்றாம் அணி அமைப்பது தொடா்பாக விவாதித்துள்ளனா். இந்தச் சந்திப்பின்போது, முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, அவரது மகன் நிகில் குமாரசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இந்த சந்திப்பு தொடா்பாக தனது ட்விட்டா் பக்கத்தில் எச்.டி.தேவெ கௌடா கூறுகையில், ‘தெலங்கானா மாநில முதல்வா் சந்திரசேகா் ராவ் எனது இல்லத்தில் என்னை சந்தித்தாா். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக இருவரும் கலந்தாலோசித்தோம். இந்தச் சந்திப்பு சுமுகமாக நடந்தது’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.