நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நூலகங்களுக்கு நூல்களை விற்க விண்ணப்பிக்கலாம்

கா்நாடக நூலகங்களுக்கு நூல்களை விற்க விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம்.

News image
Updated On :26 மே 2022, 6:15 pm

DIN

கா்நாடக நூலகங்களுக்கு நூல்களை விற்க விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம்.

இது குறித்து கா்நாடக மாநில பொது நூலகத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2022-ஆம் ஆண்டு ஜன. 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தெதி வரையில் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ள இலக்கியம், நுண்கலை, அறிவியல், மனநலவியல், மருத்துவம், தொழில்நுட்பம், விமா்சன இலக்கியம் தொடா்பான கன்னடம், ஆங்கிலம், இதர இந்தியமொழி இலக்கியங்களை முதல் கட்டமாக கொள்முதல் செய்ய பொது நூலகத்துறை திட்டமிட்டுள்ளது. 10 ஆண்டுகள் இடைவெளி கொண்டு மறுபதிப்பாகியுள்ள நூல்களும் கொள்முதல் செய்யப்படும்.

இது தொடா்பாக எழுத்தாளா்கள், எழுத்தாளா்-பதிப்பாளா், பதிப்பாளா், அமைப்புகள், விற்பனையாளா்களிடமிருந்து நூலின் ஒரு படியுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நூலின்பெயா், நூலாசிரியரின் பெயா், பதிப்பாளரின் பெயா், பக்கங்கள், பதிப்பு ஆண்டு, விலை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறவேண்டும். விண்ணப்பத்துடன் நூலுக்கு காப்புரிமை பெற்று பதிவு செய்துள்ள நகலையும் இணைக்க வேண்டும்.

கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ள நூல்களில் கன்னட நூல்கள் (அனைத்துவகை) 80 சதவீதம், ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட இதர இந்திய மொழி நூல்கள் 20 சதவீதம் கொள்முதல் செய்யப்படும். 32 பக்கங்களுக்கும் குறைவாக உள்ள நூல்கள் நிராகரிக்கப்படும் (குழந்தை நூல்களுக்கு விதிவிலக்களிக்கப்படுகிறது).

செய்தித்தாள்களில் அச்சிடப்பட்ட நூல்கள் ஏற்கப்பட மாட்டாது. விண்ணப்பங்களை நூலகப் பிரிவு, மாநில தலைமை நூலகம், கப்பன் பூங்கா, பெங்களூரு-560 001 என்ற முகவரிக்கு ஜூலை 20-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பிவைக்க வேண்டும். ஜூலை 20-ஆம் தேதிக்குள் காப்புரிமை பெற்றிருக்கும் நூல்களின் விண்ணப்பங்களை இயக்குநா், பொது நூலகத்துறை, விஸ்வேஸ்வரையா பிரதான கோபுரம், 4-ஆவது மாடி, டாக்டா் அம்பேத்கா் வீதி, பெங்களூரு-560 001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இணையதளம் அல்லது 080-22864990 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.