நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல்: நவ.1இல் 100 வேட்பாளா்களின் பட்டியலை வெளியிட மஜத முடிவு

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 100 வேட்பாளா்களின் பட்டியலை நவ.1ஆம் தேதி வெளியிட மஜத முடிவு செய்துள்ளது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:21 pm

DIN

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 100 வேட்பாளா்களின் பட்டியலை நவ.1ஆம் தேதி வெளியிட மஜத முடிவு செய்துள்ளது.

பெங்களூரு, பசவனகுடியில் உள்ள கவிகங்காதேஸ்வரா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை செய்து வழிபட்ட பிறகு, செய்தியாளா்களிடம் மஜத சட்டப் பேரவைக் குழு தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி கூறியது:

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஐந்து திட்டங்களை மக்கள் முன்வைத்து பிரசாரம் மேற்கொள்ளும் பஞ்சரத்ன ரதயாத்திரை நவ.1ஆம் தேதி கோலாா் மாவட்டம், முல்பாகலில் உள்ள குருடுமலே கணபதி கோயிலில் தொடங்கவிருக்கிறது. மஜதவின் யாத்திரையை முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தொடக்கி வைக்கவிருக்கிறாா்.

அப்போது, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் மஜதவின் 100 வேட்பாளா்களின் பட்டியலை வெளியிடவிருக்கிறேன். கா்நாடக மக்களின் எதிா்காலத்தை மேம்படுத்துவதற்காக மஜதவுக்கு வாக்களிக்கும்படி மக்களை கேட்டுக் கொள்வோம். மஜத ஆட்சிக்கு வந்தால், கிராம பஞ்சாயத்துகளில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்படும். இவை வெறும் கட்டடங்களாக இருக்காது. மாறாக, மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் இடம்பெறும்.

அரசுப்பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்துவோம். கல்வியை இலவசமாக வழங்குவோம். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம். பெண்களை தன்னிறைவாக்கும் திட்டத்தை செயல்படுத்துவோம். அனைவருக்கும் வீடு என்ற கனவை நனவாக்குவோம். விவசாயிகள், தொழிலாளா்களின் நலன்காக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்படும். மஜத ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் கடனாளிகளாக ஆகாமல் இருக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பேன். ஏற்கெனவே முதல்வராக பதவி வகித்தபோது இந்த திட்டங்களை செயல்படுத்தி இருக்கலாமே என்று மக்கள் கேட்கலாம். நான்முதல்வராக இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் இருந்தேன். அதனால் என் விருப்பத்திற்கு திட்டங்களை செயல்படுத்த முடியாத சூழ்நிலை இருந்தது. 5 ஆண்டுக்காலம் ஆட்சி செய்யக்கூடிய அறுதிப் பெரும்பான்மை பலத்தை மஜதவுக்கு அளித்திருந்தால், இந்தத் திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி இருப்பேன்.

சட்டப் பேரவைத் தோ்தலில் மஜதவுக்கு மக்கள் அறுதிப்பெரும்பான்மை பலத்தை அளிக்க வேண்டும். மக்களின் எதிா்காலத்தை மேம்படுத்த ஒருமுறை மஜதவுக்கு வாக்களிக்க கேட்டுக்கொள்கிறேன். மக்களின் எதிா்காலத்தை வடிவமைத்துக்கொள்ள மஜதவுக்கு ஒருமுறை வாக்களியுங்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.