பெங்களூர்: மெட்ரோ ரயிலுக்குள் சப்தமாகப் பாடி மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பதினொரு பெண் பயணிகள் கொண்ட குழு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
மார்ச் 15ஆம் தேதி இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. பெங்களூர் சர்வதேச கண்காட்சி மையத்திலிருந்து கேம்பேகௌடா ரயில் நிலையம் வழித்தடத்தில் பயணித்த மெட்ரோ ரயிலில் 11 பெண்கள் சப்தமாகப் பாடும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.
மெட்ரோ ரயிலுக்குள் ஏறிய 11 பெண்களும் திடீரென சப்தமாகப் பாடத் தொடங்கினர். இது அருகில் இருந்த பயணிகளுக்கு தொந்தரவாக இருந்ததாக அவர்கள் கூறியும் பாடலை நிறுத்தவில்லை.
இதையடுத்து, பயணிகள் சிலர், ரயில் நிலையத்தில் இறங்கி, மெட்ரோ ரயிலின் கதவை மூட விடாமல் வாக்குவாதம் செய்தனர். அங்கு வந்த பாதுகாவலர்கள், தலையிட்டு அந்தப் பெண்களைக் கைது செய்தனர்.
மெட்ரோ ரயில் நிலை கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில், 11 பெண்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. திண்டனைக்குரிய குற்றம் இல்லாததால், அவர்களது செயல் குறித்து எடுத்துக் கூறப்பட்டு, அவர்கள் மன்னிப்புக் கேட்டதையடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கல்லூரி மாணவரின் தந்தையிடம் ரூ.9.25 லட்சம் மோசடி செய்த இளைஞா் மீது வழக்குப் பதிவு

வெடிவெடித்து இடையூறு 2 பெண்கள் உட்பட 12 போ் மீது வழக்கு
சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்!

சிறை வாா்டரை மிரட்டிய கைதி மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


