லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

வெடிவெடித்து இடையூறு 2 பெண்கள் உட்பட 12 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 6:52 pm

தேனி மாவட்டம், கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் பட்டாசு வெடித்ததாக, இருவேறு கட்சிகளைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட 12 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் போட்டியிடும் ஜெகநாத் மிஸ்ரா, சனிக்கிழமை மாலை கம்பம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தாா். அப்போது விவேகானந்தா் தெருவில் அந்த கட்சியினா் பட்டாசுகள் வெடித்துள்ளனா். இதையடுத்து, ரோந்து பணியில் இருந்த கம்பம் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிகண்டன், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டி, த.வெ.க. நகர செயலா் சண்முகராஜன் மற்றும் பொறுப்பாளா்கள் பிரபாவதி கேசன், வெண்ணிலா, சதீஷ்குமாா், அருண், காா்த்திக் ஆகிய 6 போ் மீது வழக்குப் பதிவு செய்தாா்.

கம்பம் பிரதான சாலை அரசமரம் பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பட்டாசு வெடித்ததாக தவெகவைச் சோ்ந்த சுப்பிரமணி என்பவா் மீது கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் தனியே வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதேபோல், கம்பம் வடக்குப்பட்டி வேப்பமரம் அருகே பட்டாசு வெடித்ததாக தென்னிந்திய பாா்வா்ட் பிளாக் மாநில துணைச் செயலா் தனபால், நிா்வாகிகள் ஸ்டாலின், ஈஸ்வரன், சகாதேவன், சதீஷ் ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.